முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே நிறுத்தி பேருந்தை சுற்றி வளைத்த ஏழுக்கும் மேற்பட்டபெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த காடையர்களே வவுனியாவிலிருந்து மட்டக்களப்பை நோக்கிப் பிரயாணித்த தமிழர் ஒருவரை இவ்வாறு பலவந்தமாக அடித்து இழுத்துச் சென்று தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.
பலமாக தலையில் தாக்கப்பட்டு உணர்வற்ற நிலையில் வீதியோரத்தில் வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த இந்தப் பிரயாணியை சக பிரயாணிகளும் நடத்துனரும் உடனடியாக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர்.
பின்னர் உடனடியாக இவர் அம்புலன்ஸ் வண்டி மூலமாக மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவ பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நடந்தேறியது. இச்சம்பவம் காரணமாக பிரயாணமானது இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகதாமதப்படுத்தப்பட்டதோடு பிரயாணிகள் கடுமையான அசௌகரியத்துக்கும் உள்ளாகினர்.
இக் குற்றச்செயலை சர்வசாதாரணமாகவும் துணிகரமாகவும் மேற்கொண்ட காடையர்கள் ஏ.பீ. கே 6097 இலக்க முச்சக்கரவண்டியிலேயே தப்பிச் சென்றனர். மிகவும் அச்சமடைந்த பிரயாணிகள் 119 மற்றும் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையங்களைத் உடன் தொடர்பு கொண்ட போதும் 45 நிமிடங்களின் பின்னரேயே பொலிசார் சமுகமளித்திருந்தனர்.
வவுனியாவிலிருந்து பேருந்தில் ஏறிய செவனப்பிட்டியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பாதிக்கப்பட்ட பிரயாணிக்கும் இடையில் வவுனியாவில் வைத்து பேருந்தில் ஏற்பட்ட சிறியதொரு வாக்குவாதத்துக்கு பழிதீர்க்கவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தாக்குதல் நடத்தியவர்கள் சத்தமிட்டுச் சென்றிருந்தனர்.
பிரயாணிகள், சாரதி, நடத்துனர் ஆகியோர் வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்ததோடு முச்சக்கரவண்டி இலக்கத்தையும் தெரிவித்திருந்தனர். குறித்தபேருந்தில் பிரயாணிகளின் பாதுகாப்புக் கருதி கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/230319.html
Geen opmerkingen:
Een reactie posten