தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 april 2017

தமிழுக்கு ஒருவிலை சிங்களத்திற்கு ஒருவிலை!!

தகவல் அறியும் சட்டமூலத்தை அறிந்து கொள்வதற்காக மக்கள் பூர்த்தி செய்யும் விண்ணப்ப படிவங்கள் மொழிகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் விபரங்கள், அரச இரகசியங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களை தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அமுலுக்கு வந்த தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பலர் தகவல்களை பெற்றுக்கொண்டதுடன், சில தகவல்கள் வழங்குவதற்கும் மறுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், மக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அச்சுப்பிரதியானது வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
குறிப்பாக சிங்கள மொழி என்றால்- 21 ரூபா என்றும், தமிழ் மொழி என்றால் -54 ரூபா என்றும் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த விலையானது அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Geen opmerkingen:

Een reactie posten