தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர் கருத்து வெளியிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முன்னைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் போதியளவு வசதிகள் காணப்பட்டது. சேவையை நோக்கமாக கொண்டு பாராளுமன்றக்கு வந்தனர்.
ஆனால் இன்று பாராளுமன்ற தொழில் ஒரு வியாபாரமாக போய்விட்டது. அதிலும் எமது மக்கள் பிரதிநிதிகளால் நாங்கள் அழிக்கப்படுகிறோம். பல கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளோம்.
பிரபாகரனுக்கு நான் எதிரி இல்லை, நான் சகல விடயங்களையும் ஆழ்ந்து அறிந்தவன் என்ற ரீதியில் சில நடவடிக்கையில் இருந்து பிரபாகரனை திருந்தி செயற்படச் சொன்னேன்.
தம்பி சாபத்துக்கு ஆளாக போகிறாய் உடனடியாக பேச்சுவாரத்தையை நடாத்துங்கள் என தெரிவித்தேன். அன்று நான் கூறியதை கேட்டிருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார்.
அன்றைய ஜனாதிபதிக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினேன். ஆனால் நிறுத்தவில்லை. இப்பகுதியில் ஒருவர் கூட யுத்தத்தை நிறுத்துவதற்கு நினைத்திருந்தால் இன்று இந்த நிலை எமக்கு வந்திருக்காது.
பல தலைவர்கள், பல நாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டார்கள். கேட்கவில்லை இறுதியில் மக்கள் அழிக்கப்பட்டார்கள்.
தப்பி ஓடிவந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், அங்கு நடந்தவை பல எமக்கு வெக்கம், அவமானம் என்பவற்றை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் என அனைவரும் அறிவார்கள்.
யுத்தத்தை நிறுத்துமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சொல்லவில்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய புனிதமான கடமையை யாரும் செய்யவில்லை. நடந்த அநீதிகளுக்கு தற்போது நீதி வேண்டி சர்வதேசத்திடம் போய் நிற்கிறோம்.
விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களை அதிகம் கொலை செய்தார்கள் என புதிதாக வந்துள்ள சுமந்திரன் எலிக்குட்டி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தெரிவித்து விட்டு அத்துடன் 2 வருடங்களில் நல்ல வெளிநாட்டு தலையீடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே இது நடக்கப்போற விடயம் இல்லை சர்வதேச விசாரணையும் நடக்கப்போவதில்லை.
சம்பந்தன் மாவைக்கு அரசியல் தெரியாது. சுமந்திரனுக்கு அறவே அரசியல் தெரியாது. இவர்கள் எல்லாரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யர்களின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
You may like this video
Geen opmerkingen:
Een reactie posten