தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 april 2017

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஐவர்? நெதர்லாந்து நீதிமன்றம் முக்கிய முடிவு

நாட்டுக்கு வெளியே ஆயுதம் தாங்கி போரிட்டவர்களாக இருந்தாலும் நெதர்லாந்து குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க முடியும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்ற காரணத்தால் நெதர்லாந்தில் தண்டனை பெற்றவர்கள் விடயத்தில் அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டதாக ஐந்து பேருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐந்து பேரும் ஹேக் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
குறித்த 5 பேரும் சுதந்திர நாடு கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்து போரில் கலந்து கொண்டார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 பேரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே தண்டிக்க முடியும்.
விடுதலைப் புலிகள் ஈடுபட்ட மோதல் என்பது இருவேறு நாடுகளுக்கு இடையே ஆனதல்ல எனவும், அது இலங்கை தேசத்தின் உள்விவகாரம் எனவும் நீதிமன்றத்தில் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது.
இதனால் குற்றவாளிகள் என கருதப்படும் 5 பேரும் சர்வதேச கலவரக்காரர்களாக கருத முடியாது எனவும் மேல்முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten