இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் தொடர்ந்து பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கு ஆதரவு பெற்றுக் கொள்வதற்காக இரும்பு கம்பியால் தன்னை தானே சுட்டு சித்திரவதை செய்துக் கொண்டுள்ளார்.
தனது சொந்த நாடான இலங்கையில் அதிகாரிகள் மிகவும் மோசமாக நடந்துக் கொள்வதாகவும், அதற்கு ஆதாரமாக தனது முதுகில் ஐந்து வடுக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவரது குற்றச்சாட்டினை நிராகரித்த நீதிமன்றம் இதுவொரு ஒரு சுய சித்திரவதை என தீர்ப்பளித்துள்ளது.
ஒரு மருத்துவர் அவரை பொது மயக்க மருந்து வழங்கிய பின்னர், சூடான இரும்பு கம்பிகளினால் அவருக்கு சூடு வைத்திருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுடன், அவரது உறவினால் அவர் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
35 வயதான குறித்த இலங்கையர் தான் புகலிட கோரிக்கையாளர் என கூறி போலி கடவுச்சீட்டில் 6 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக பெரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அதற்காக அவர் சட்டக் கட்டணங்களை மோசடி செய்ததாக தெரிய வருகிறது.
2007 ஆம் ஆண்டு விடுதலை புலிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் தான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குறித்த இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் புகலிட கோரிக்கையாளரின் கோரிக்கையை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் பெருமளவு இலங்கையர்கள் புகலிடம் கோரியுள்ள நிலையில், அதற்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/uk/01/143403?ref=lankasri-home-dekstop
Geen opmerkingen:
Een reactie posten