சென்னையைச் சேர்ந்தவர் ஷாலின் மரிய லாரன்ஸ். பிட்னஸ் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதுதவிர, திருநங்கைகளின் வளர்ச்சி, அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் நூலகம் அமைப்பது, சமூகநீதி தொடர்பான கட்டுரைகளை எழுதுவது என பரபரப்பாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரை எந்த அளவிற்கு வதைக்க முடியுமோ, அந்த அளவிற்கு வதைத்துவிட்டனர்.
இது குறித்து அவர் கூறுகையில், அண்மையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வெர்சஸ் பிளாக்கர்ஸ் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
நான் பிளாக்கில் எழுதுவதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு பேசுவதற்காக அழைத்தனர். அந்த நிகழ்ச்சியில் நான் பேசும்போது, பெண்களை பாலியல்ரீதியாக வகைப்படுத்துவதாக மீம்ஸ் போடுகின்றனர். இது எங்களை மிகவும் கஷ்டப்படுத்துகிறது என்று தான் கூறினேன்.
இதற்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் என்னை எந்த அளவிற்கு அசிங்கப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு அசிங்கப்படுத்திவிட்டனர்.
முன்பு எல்லாம் கூகுளில் தன்னுடைய பெயரை தேடினால் தான் விருது வாங்கிய படம் தான், வரும் தற்போது தன்னை அவமானப்படுத்தி மீம்ஸ் கிரியேட்டர்கள் போட்ட மீம்ஸ்கள் தான் வருகிறது என்று புலம்பியுள்ளார். 2014-ஆம் ஆண்டு திருநங்கைகளின் நலனுக்காக பணிபுரிந்ததற்காக மரியா லாரன்சுக்கு விருது கிடைத்துள்ளது.
இதை எல்லாம் செய்கிறவர்கள் யார் என்று தெரியும் எனவும், நந்தினி மரணத்தில் இருந்து பெண்களை பாதிக்கும் அனைத்து விவகாரங்களையும் பேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறேன்.
அதன் காரணமாகத்தான் இவர்கள் இது போன்று செய்கிறார்கள்.
மேலும் பெண்களை இப்படியெல்லாம் அவமதிப்பது எந்த வகையில் சரி எனக் கேள்வி எழுப்பினேன். உடனே, குறித்த நபர் என்னுடைய போட்டோவைப் போட்டு, 'இவள என்ன பண்ண முடியுமோ, பண்ணுங்க' என எழுதியிருந்தான்.
இது எனக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இவள ஓட ஓட வெட்டிக் கொல்லனும் என வித விதமான படங்களை போட்டு வெளியிடுகிறார்கள்.
ஒரு பெண்ணை எந்தளவுக்கு அசிங்கமாக விமர்சிக்க முடியுமோ, அந்த எல்லைகளை எல்லாம் தாண்டி விமர்சிக்கிறார்கள். இதைப் பற்றி கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப் போகிறேன் என்றதும், புகார் கொடுத்து கிழிச்சிருவியா நீ' எனப் பதில் கொடுக்கிறார்கள்.
என் பெயரை பேஸ்புக்கில் எழுதினாலே, அசிங்கமான படங்கள்தான் வருகிறது என்று கவலையுடன் கூறியுள்ளார்.
http://news.lankasri.com/india/03/122780?ref=lankasritop
இந்த அம்மணிக்கு நீயா நானா கோபி கட்டாயம் பரிசு கொடுப்பார் என்று நிகழ்ச்சியில் அடிக்கடி அம்மணியை காட்டும்போதே உணர்ந்தேன்,அதுவே நடந்தது!
அம்மணி பெண்களுக்கு எதிராக கதைக்கும் ஆண்கள் பெண்களின் எதிரிகள் அல்ல(பெண்கள் சார்பாக கதைக்கும் ஆண்கள்தான் ஆபத்தானவர்கள்,அவர்கள் வளர்க்கப்பட்ட கலாச்சாரம் ,சூழல் அப்படி!
முஸ்லீமாக வளர்க்கப்பட்டிருந்தால் முக்காடு போடுங்கடி என்றிருப்பார்,கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டிருந்தால் sister என்று சொல்லி காதலித்து கல்யாணமும் செய்திருப்பார்!இவர்கள் இந்துமதம் அறியாத பாஜக,சிவசேனா போன்றோரால் வளர்க்கப்பட்ட இந்துக்கள்!
(பெண்களை ஒழுக்கமாக நடக்கும்படி சொல்லுதல் ஆணாதிக்கம்னா நீங்கள் பெண்ணாதிக்க வாதியா?உங்கள் பேச்சு,தோரணை,ஆண்களை எடுத்தெறிந்து பேசிய முறை எல்லாமே அப்படித்தான் உணர்த்தியது!பெரியார் தமிழனா?ஒழுக்கசீலரா?அவர் தமிழுக்கு,தமிழருக்கு செய்த துரோகத்தை பாராட்டியா அவர் கொள்கையை பின்பற்றுகிறீர்கள்?)
அம்மணி உங்கள் பேச்சில் எந்த நியாயமும் இல்லை,என்றாலும் நல்ல தமிழன்(தமிழ்நாட்டில் தமிழர் யார்?கோபி?நீங்க??எதற்கும் உங்கள் முன்னோர் பற்றி தேடுங்க,நீங்க கூட போர்த்துகீசராக,பிரான்ஸ் காரியாக இருக்கலாம்) தன்னை விட வலிமை குறைந்தோரை,குழந்தைகளை,பெண்களை முதியோரை ,பலயீனமானவரை தாக்கான்!
தாக்குபவன் பிறப்பில் தவறு உள்ளது!
எதிரியோ,துரோகியோ பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது,அவமானப்படுத்துவது நல்லவன் செயல் அல்ல,அவன் பிறப்பு கீழானதாக இருந்தால் மட்டுமே அவன் அப்படி பேசுவான்,செய்வான் !
...........................
Geen opmerkingen:
Een reactie posten