தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 april 2017

அதிர்ச்சி ரிப்போர்ட்!

நீ எந்த நாட்டை சேர்ந்தவன்? புலம்பெயர்ந்தவர் மீது லண்டனில் கொலைவெறி தாக்குதல்


புகலிடம் தேடி பிரித்தானியா வந்துள்ள 17 வயது இளைஞர் மீது கும்பலொன்று நடத்தியுள்ள தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள பேருந்து நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஈரான் நாட்டை சேர்ந்த 17 வயதான நபர் தன் இரு நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் அருகில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்தது, அவர்கள் அந்த இளைஞரிடம் நீ எந்த நாட்டை சேர்ந்தவன் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் நான் ஈரானிலிருந்து புகலிடம் தேடி இங்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த கும்பல் அந்த நபரை சராமரியாக தாக்கினார்கள். தலையிலும், முகத்திலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இளைஞரின் இரு நண்பர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தற்போது படுகாயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
http://news.lankasri.com/uk/03/122524?ref=lankasritop

பிரான்சில் பயங்கர வெடிவிபத்து..30 பேர் காயம்? ரத்தம் வழிந்த நிலையில் ஓடிய மக்கள்


பிரான்சில் நடந்த திருவிழாவின் போது, எதிர்பாரத விதமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதால் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், 5 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்சின் பாரிசில் உள்ள Villepinte பகுதியில் நடந்த யேல்லோ என்ற திருவிழாவின் போது மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும், பலர் உயிருக்கு போராடிவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து கூறுகையில், பிரான்சில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் கேளிக்கையான நிகழ்வுகள் சில நடைபெறும். அது போன்று தான் 20 அடி உயரமுள்ள பொம்மை ஒன்றை வைத்து அதில் கட்டைகள் மற்றும் சில பொருட்கள் வைக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றி எரிந்த அந்த பொம்மை திடீரென்று கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி வெடித்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் போது சில குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்வதற்கு ஓடியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான விடியோவும் வெளியாகியுள்ளது.
மேலும் இது ஒரு எதிர்பாராத விபத்து தான் என்றும், இது தீவிரவாத தாக்குதல் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/france/03/122516?ref=lankasritop

பிரான்ஸில் உயிர் கொல்லி நோயை பரப்ப போகும் தீவிரவாதிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

பிரான்ஸில் ரசாயன தாக்குதல் நடத்தவும், உயிரை கொல்லும் தொற்று நோயை பரப்பவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், பிரான்ஸில் தற்போதிலிருந்து 2030 வரை பல வித தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதில் முக்கியமாக தற்கொலை படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் உயிரை கொல்லும் தொற்று நோயை ஊசி மூலம் ஏற்றி கொண்டு அதை நாடு முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
மேலும், கதிரியக்க, உயிரியல் அல்லது இரசாயன பொருட்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல விதமான விடயங்களால் நாட்டை அழிக்க தீவிரவாதிகள் தயாராகி வருவதால் உச்சகட்ட பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
http://news.lankasri.com/france/03/122463?ref=right_related

Geen opmerkingen:

Een reactie posten