முல்லைத்தீவில் அண்மை நாட்களாக சில இராணுவப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த துண்டு பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.
பொது மக்களின் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தினர் தம்வசம் வைத்திருக்கின்றனர். அத்துடன், மக்களிடம் இராணுவத்தினர் கையளித்த சில காணிகளில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இராணுவத்தினர் ஜனநாயக வழிப்போராட்டம் தொடர்பில் தவறான முறையில் நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இவை போன்ற முக்கிய விடயங்களின் மூலம் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் "இராணுவ வீரர்களுக்கு முதல் மரியாதை" என்னும் விளம்பர துண்டுகள் முல்லைத்தீவில் ஆங்காங்கே இவ்வாறு துண்டுபிரசுரங்கள் காணப்படுகின்றன.
http://www.tamilwin.com/community/01/141279?ref=view-latest
Geen opmerkingen:
Een reactie posten