மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு தொடக்கம், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 888,294 அகதிகள் மலேசியாவில் தங்கியிருப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்கள்.
இவர்களில் 824,419 பேர் மியான்மாரைச் சேர்ந்த அகதிகளாவர். மியான்மாரை அடுத்து, இலங்கை அகதிகளுக்கே அதிகளவில் புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், இலங்கையைச் சேர்ந்த 26,615 அகதிகளுக்கு மலேசியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து சோமாலியா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய நாடுகளின் அகதிகளுக்கும் மலேசியாவில் தங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten