உலகத்தில் தற்போது பயங்கரமாக உருவெடுத்துள்ள ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி ஒருவர் சரணடைந்த காணொளி நேற்று வெளியிடப்பட்டு பரபரப்பாக பேசப்படுவதோடு, ஆங்கில ஊடகங்களிலும் வெகுவாக விமர்சிக்கப்படுகின்றது.
உலகிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்து வரும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் பலவீனமடைந்து விட்டார்கள், முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகின்றது.
குறித்த காணொளியில் குர்திஷ் படையினர் ஒரு கட்டிடத்தை சுற்றி வளைத்துக் கொள்கின்றனர், அந்த கட்டிடத்திற்குள் சில தீவிரவாதிகள் இருக்கின்றனர்.
பின்னர் குர்திஷ் படையினர் சரணடைந்து விடுங்கள் கொல்ல மாட்டோம், நாங்கள் உங்கள் நண்பர்கள் என வாக்குறுதி அளித்ததை கேட்டு ஒரு தீவிரவாதி மட்டும் சரணடைகின்றார்.
எனினும் அந்த கட்டிடத்திற்குள் மேலும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களுக்கு சரணடைவது விருப்பம் இல்லை, என சரணடைந்தவர் அச்சத்துடன் பரிதாபமாக தெரிவிக்கும் வகையில் காணொளியானது அமைந்துள்ளது.
குர்திஷ் படையினருக்கும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருக்கும் தொடர்ந்தும் யுத்தங்கள் இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten