குறித்த குற்றத்தில் ஈடுபட்ட 29 வயதான பவுண்டி ஹண்டர் Dinko Valevவுக்கு நான்கு ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
வேட்டைக்காரர்கள் குழு தலைவனாக திகழும் Dinko Valev, சிரியாவிலிருந்து தப்பிய அகதிகளை துருக்கி எல்லையில் இடைமறித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
வெறுமனே ஒரு விளையாட்டாக கருதி இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட Dinko Valev கூறியதாவது, ஒவ்வொரு அகதியும் ஜிகாதியாக இருக்க சாத்தியம் உள்ளது என கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இவர் அரசு ஆதரவுடன் தான் இச்செயலில் ஈடுபடுகிறார் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், Dinko Valev தன் வேட்டை குழுவுடன் அகதி பெண்களையும், குழந்தைகளையும் சுற்றி வளைத்து சேற்றில் முகத்தை மூழ்க சொல்லி கட்டாயப்படுத்திய வீடியோ கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
மனித உரிமை ஆதரவாளர்களிடையே கடும் சீற்றத்தை எற்படுத்தியது. இதனையடுத்து, பல்கேரி வழக்கறிஞர்கள், இனம் வெறுப்பு சட்டங்கள் மீறல்களுக்காக Dinko Valev மீது குற்ற வழக்கு போட்டனர்.
இந்த வழக்கில் Dinko Valevவுக்கு நான்கு ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten