வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் கடந்த 19ம் திகதி நண்பகலில் பெண் குரங்கு ஒன்று அங்கு தங்கியிருக்கும் மருத்துவ மாணவர்களின் அறைக்குள் நுழைந்துள்ளது.
அதனை பிடித்து கால்களை கட்டிப்போட்டு குச்சியாலும், பெல்ட்டாலும் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர் அந்த மாணவர்கள். இதனால் அந்த வாயில்லா உயிரினமான குரங்கின் கால்களும், எலும்புகளும் உடைந்தன.
ஆனாலும் திருப்தியடையாத அந்த மருத்துவ மாணவர்கள் இரும்பு கம்பியால் அதன் மர்ம உறுப்பை சிதைத்து அதனை கொடூரமாக கொலைசெய்ததாக கூறப்படுகிறது.
பரிதாபமாக உயிரிழந்த அந்த குரங்கை, அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் சிலர் சமயலறைக்கு பின்னால் குழி தோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வேறு சில மாணவர்கள், விலங்கின ஆர்வலர்களிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் குரங்கு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து அதனை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
குரங்கினை புதைத்த இடத்தில் விலங்கின ஆர்வலர் தோண்டி எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் ஃபேஸ்புக் உட்பட்ட சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.
மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் விலங்கின ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten