தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 november 2016

இரண்டானது யாழ்ப்பாணம் யாருக்கும் தெரியுமா??

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் நாவற்குளியில் அத்து மீறி குடியேற்றப்ட்ட சிங்கள மக்களுக்கு ரணில் மைத்திரி காலத்தில் புத்த கோயில் கட்டிக் கொடுக்கபட்டு முழுமையான சிங்களக் கிராமமாக மாற்றிக் கொடுக்கப்ட்டுள்ளது.
சிங்களவர்களுக்கான பாலர்பாடசாலை மற்றும் உயர்தரப் பாடசாலைகளை கட்டிக் கொடுப்பதே அடுத்த திட்டம். அதன் பின்னர் அங்கு பிறக்கக் போகும் அடுத்த தலைமுறையினர் யாழ்ப்பாணம் தமது சொந்த நிலம் என கொண்டாடப் போகின்றனர். அதை உடைத்து இரண்டாக்கும் செய்தியை தடுக்க எம்மவரிடம் என்ன திட்டம் உள்ளதா.
நாவற்குழியின் அமைவிடம்
நாவற்குழி என்பது யாழ் குடாநாட்டின் மையப்பகுதி. கடல் மற்றும் நிலப்பகுதியை உள்ளடக்கிய இந்தப் பகுதியானது புவியல் ரீதியாக இராணுவ மற்றும் அரசியல் வேலைத்திட்டங்களுக்கு மிக முக்கியமான இடம்.
navakule










நாவற்குழி – பரீட்சார்த்த குடியேற்ற முயற்சியின் களம்
நாவற்குழி குடியேற்றமானது ஒரு பரீட்சார்த்த முயற்சியே. சிறிலங்கா அரசின் மிக்ப்பெரிய குடியேற்றத்திட்டமான மகாவலி குடியேற்றத்திட்டமானது ஆறுகள் மற்றும் குளங்களை சார்ந்து உருவாக்கபட்ட குடியேற்றத்திட்டம். ஆனால் நாவற்குழி குடியேற்றத் திட்டமானது பிரத்தியேகமாக யாழ்குடா நாட்டை மையப்படுத்தி திட்டமிடப்பட்ட ஒன்று.
கடனீர் ஏரிகள் மற்றும் மக்கள் குடியிருப்புகளை அண்டி எப்படி சிங்களக் குடியேற்றங்களை மேற் கொள்ளலாம் என்று பரீட்சிர்த்துப் பார்க்கும் களமாகதான் நாவற்குழி தெரிவு செய்யப்ட்டிருக்கிறது.
ஆறுகள் குழங்களை அண்டி உருவாக்கப்பட்ட மகாவலி குடியேற்றத் திட்டத்தை விட கடனீர் ஏரிகள் மற்றும் மக்கள் குடியிருப்புகளை அண்டி உருவாக்கபட்ட நாவற்குழி குடியேற்றத் திட்டம் மிக வேகமாக நிலையெடுத்துவிட்டது.
எதிர்வுகூறல் – எதிர்கால குடியேற்ற திட்டமிடல்!!
வெற்றியளித்துள்ள நாவற்குழி குடியேற்றமானது புற்றுநோய் போல் இடைக்காடு வரை விஸ்தரிக்க இயலுமானது.
ஒரே புவியியல் அமைப்பு அதே பாணியிலான அடக்குமுறை அடக்குமுறைகளையோ குடியேற்றங்களையோ எதிர்கொள்ள திராணியற்ற தமிழ் அரசியல் தலமைகள் இருக்கும் போது சிங்கள அரசானது இடைக்காடுவரை தமது குடியேற்றத்தை விஸ்தரித்து யாழ் குடாநாட்டை இரண்டாக பிளந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
navakule01







நாவற்குழி குடியிருப்புகளும் புத்த கோயிலும்
நாவற்குழியில் குடியேற்றப்ட்ட சிங்களவர்கள் மிகச்சிறந்த பெரிய கல் வீடுகள் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட சகல சராசரி வசதிகளுடனும் மிகச் சிறப்பாக வாழுகின்றனர்.
சிங்கள குடியேற்றத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மழை வெள்ளத்தை தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் தமிழர் குடியிருப்புகள் காணப்படுகின்றது.
தவிர புத்த கோயிலானது மிக வேகமாக உருப்பெருத்து வரும் நிலையில் பாரிய புத்த கோயில் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் மும்மரமாக நடைபெறுகின்றன.
இந்த புத்த கோயிலானது சட்டலைட் தொலைகாட்சி வசதிகள் உள்ளிட்ட பல வசதிகளுடன் இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
navakule02
navakule03
navakule04
navakule05






































-வர்மன்-

Geen opmerkingen:

Een reactie posten