தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 november 2016

புலம்பெயர் தமிழர்களை அடக்கவரும் புதிய சக்திகள்! மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படும் ஆபத்து- மனம் திறந்து கவலை வெளியிட்ட ஒபாமா

மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களால் அந்த நாடுகளில் குடியேறியுள்ள தமிழர்கள் உட்பட அகதிகளாக தஞ்சம் கோரிய மக்களுக்கு மிகப்பெரியதொரு சவால் காத்திருக்கிறது.
இலங்கை உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்கு மத்தியில் கடல்மார்க்கமாக மேலும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சென்ற மக்களுக்கு இன்னுமொரு துன்பகரமான செய்தி இனிவரும் காலங்களில் கிடைக்கப்போகின்றது என்பது பெரும் கவலைக்குரிய விடையம் தான்.
கடந்த சில ஆண்டுகளாக ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இப்பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அந்த நாடுகளில் குடியேறிய மக்களும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா தொடர்ந்தும் நீடிப்பதா? விலகி தனித்து இயங்குவதா என்பது தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் விலகிக் கொள்வது என்று பிரித்தானியாவின் பெரும்பான்மை மக்கள் அளித்த வாக்குகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் விளைவாக அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் பதவியில் இருந்தும் விலகிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, இந்த மாதம் 8ம் திகதி நடந்த அமெரிக்க தேர்தலில் சற்றும் எதிர்பாராத விதமாக டொனால்ட் ட்ரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவை உணர்த்துவது என்ன?
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் தேசியவாதம் பலம் பெற்றுவருவதை உணர்த்தி நிற்கின்றது.
குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் குடியேறிய மக்களை வெளியேற்றுவேன்.
அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உட்பட அனைத்து முக்கிய செயற்றிட்டங்களிலும் முன்னுரிமை கொடுப்பேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
மேலும் முஸ்லிம்களை வெளியேற்றுவேன் என்றும், அமெரிக்காவை அமெரிக்கர்களுக்கு உரிய நாடாக மாற்றுவேன் என்றும் டொனால்ட் ட்ரம்ப் பேசிய பேச்சுக்கள் அந்நாட்டு மக்களிடத்தே ஏற்படுத்திய தாக்கமும், அங்கிருக்கும் அமெரிக்க இனவாதிகளின் உள்ளக்கிடக்கைகளை தேர்தல் பெறுபேறுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியுள்ள பிரித்தானியாவில் இனிவரும் காலங்களில் குடியேறியுள்ள மக்களுக்கும், இனிமேல் குடியேற நினைக்கும் மக்களுக்கும் பேராபத்து காத்திருப்பதாகவே உலகத்தலைவர்கள் எதிர்வு கூறத்தொடங்கியிருக்கிறார்கள்.
காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரித்தானியாவில் வேலை வாய்ப்புக்கள் இனிவரும் காலங்களில் அந்த நாட்டு மக்களுக்கே கிடைக்கும் என்பதும், அவர்களின் தொழில் வழங்களில் பிரித்தானியர்களுக்கு அடுத்தபடியே ஏனையவர்களுக்கும் கிட்டும் என்பதையும் அச்சமாக நோக்குகிறார்கள்.
இதற்கிடையில், இப்பொழுது பிரித்தானியாவில் வியாபாரிகள் பலர் தங்கள் தொழில் முயற்சிகளைக் கைவிடும் நிலையில் இருக்கின்றார்கள். இதனை அண்மையில் சில புலம்பெயர் உறவுகளைச் சந்தித்தவேளை அவர்களின் பேச்சுக்களில் இருந்து உணர முடிந்தது.
இவற்றுக்கெல்லாம் காரணம் பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் தேசியவாதக் கொள்கைகள் தான் என்கிறார்கள் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்.
இதை மேலும் உறுதிப்படுத்துவதாக அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கவலைகளும் உறுதிப்படுத்துகின்றன.
தனது இறுதி வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு கிரீஸ் சென்றுள்ள ஜனாதிபதி ஒபாமா, தேசியம் என்ற பெயரில் தீய ஒழுக்கம் முன்வந்துள்ளதனை காண முடிகின்றது.
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரிடெக்ஸ் வாக்களிப்பு, அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களினுள் இதனை காண முடிகிறது.
அமெரிக்கா, பிரித்தானியாவை சுற்றி கட்டியெழுப்பப்படுகின்ற இனவாதத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நாங்கள் செயற்பட வேண்டும்.
இனம் மற்றும் மத ரீதியாக பிளவுப்படும் வேதனைக்குரிய அனுபவத்தை அமெரிக்கா முகம்கொடுப்பதாக ஒபாமா இங்கு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க மக்களின் பார்வையில் காணப்பட்ட அசைவுகள் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு காரணமாகியுள்ளதாக ஒபாமா கூறியுள்ளார். மேலும் ட்ரம்பின் வெற்றி தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அவர் குறிப்பிட்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
மேற்கத்தேய நாடுகள் இப்பொழுது புதிய பரிமாண ஒழுங்கில் செயற்பட ஆரம்பித்திருப்பதனை உணரமுடிகின்றது. இந்த நாட்டு மக்கள் மீது மீண்டும், இன, மத, நிற வேறுபாடுகளைத் தூண்டி மீண்டும், அந்தந்த நாடுகளில் இருக்கும் வேறு நாட்டு மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு செயற்படத் தொடங்கியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இதனைத் தான் ஒபாமாவும் கிரீஸில் வைத்து தெரிவித்திருக்கிறார். ஒருவேளை அமெரிக்கா, பிரித்தானியாவில் ஏற்பட்டிருக்கும் இதுபோன்ற மாற்றங்களால், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து சென்று குடியேறிய மக்களின் நிலை என்ன? அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கே ஆபத்தை அவை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் எதிர்வரும் காலங்கள் தான் பதில் சொல்லும்.
ஆனால், அமெரிக்காவும், பிரித்தானியாவும் இது போன்ற அதிரடி முடிவுகளை எடுத்து, புலம்பெயர்ந்த மக்களின் குடியுரிமை மீது தாக்கத்தை செலுத்துமாயின் மற்றைய நாடுகளிலும் அதன் தாக்கம் பிரதி பலிக்கும்.
இதை உணர்ந்து தான் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னுடைய கவலையை வெளியிட்டும் இருக்கிறார்.
ஆக, எதிர்வரும் காலங்களில் மேற்கத்தேய நாடுகளிலும் இனவாத, மதவாத சக்திகள் மேல் எழுந்து செல்வதை தடுப்பது சிரமமாக இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
இலங்கையில் இப்பொழுது மையம் கொண்டிருக்கும் இனவாத, மதவாத சக்திகள் வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு எதிராக ஆவேசத்துடன் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் வெளிநாடுகளிலும் இதன் நிலை மிக மோசமாக மாறும் என்றே தோன்றுகிறது.
ஏற்கனவே, அவுஸ்ரேலியா உட்பட்ட சில நாடுகளில் அகதி அந்தஸ்து கோரியிருக்கும் புலம்பெயர்வாளர்களிடத்தில், இலங்கையில் இப்பொழுது பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன என்றும், அங்கு அபிவிருத்திகளும் வேலைவாய்ப்புக்களும் தாராளமாக கிடைக்கின்றன. அங்கு போய் நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று அந்த நாட்டு சட்டவல்லுநர்களும், குடியேற்றத் திணைக்கள அதிகாரிகளும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்வதாக புலம்பெயர் தமிழர் ஒருவரை சந்தித்த போது கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்பொழுது இன்னுமொரு சிக்கல். இது எங்கே போய் முடியப்போகின்றதோ? எல்லாம் அ(வ)ன்செயல்..!

Geen opmerkingen:

Een reactie posten