அன்றாடம் புதுப் புது சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ள அவர், நேற்று மீண்டும் ஓர் காணொளியினை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியின் மூலம் அவர் தெரிவித்துள்ளதாவது,
தற்போது என்னைப்பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது, ஆனால் ஏன் அவ்வாறு நடக்கின்றது என்பது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
ஆனாலும் நான் வேண்டுமென்றே பிரச்சினையை தூண்டவில்லை, மட்டக்களப்பு ஏ5 வீதியில் செங்கலடி பிரதேசப்பகுதியில் காணப்பட்ட அநுராதபுர காலத்திற்குரிய விகாரை ஒன்று அழிக்கப்பட்டது.
அதேபோன்று பல்வேறு விகாரைகள் மட்டக்களப்பில் அழிக்கப்பட்டுள்ளன. இவை பௌத்தத்திற்கு நேர்ந்த அவலநிலையாகும். இவற்றினை தட்டிக்கேட்க முற்பட்ட வேளையிலேயே என்னை இனவாதியாக சித்தரிக்கின்றார்கள்.
நாட்டில் பௌத்தத்திற்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அவலநிலை தொடர்பில் அனைவரும் அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
ஆனால் இவை அனைத்தும் எனது இலாபங்களுக்காக நான் செய்யவில்லை, இலங்கையில் பௌத்தம் காக்கப்பட வேண்டும் அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பில் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வரும் வரலாற்று சின்னங்களை காக்க நான் முன்வருவேன். இன்னும் 5 நாட்களில் செங்கலடி ஏ5 வீதியில் நான் போராட்டம் செய்வேன்.
தனியாக சென்று சரி நான் போராட்டத்தில் ஈடுபடுவேன், எனவும் அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் உள்ள பன்குடாவெளி பிரதேசத்தில் புதிய புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி தயாராகி வருவதாகவும், நேற்று சுமார் ஒன்பது பௌத்த பிக்குக்கள் அடங்கிய குழுவினராக பொலிஸாருடன் சென்று குறித்த பிரதேசத்தை பார்வையிட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மட்டக்களப்பில் சிங்கள, தமிழ் கலவரத்தை உருவாக்க சிலர் திட்டம் தீட்டுவதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten