தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 november 2016

மைத்திரி அரசு தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்!

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும் இலங்கையில் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான குழுவின் துணைத் தலைவர் Felice Gaer,
இலங்கையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்களே ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கடந்த 2012 தொடக்கம் 2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதி வரையில்,பொலிஸ் தடுப்பு காவலில் வைத்திருக்கும் கைதிகளை பொலிஸார் சித்திரவதைக்கு உட்படுத்துகின்றார்கள் என பொலிஸாருக்கு எதிராக 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten