வருடம் ஒன்றிற்கு சுமார் 3,60,000 புதிய குடிவரவாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும்.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2107 ஆம் ஆண்டிற்கான குடிவரவுத் திட்டம், அணுகுமுறை என்பன குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதில் எத்தனை புதிய குடிவரவாளர்கள் வரவழைக்கப்பட இருக்கிறார்கள் என்பதும், இதற்கப்பல் எந்தெந்த வகையில், என்னென்ன தகைமையில் வர வரவழைக்கப்பட இருக்கிறார்கள் என்பதும் முக்கியமானவை.
கடந்த சில வாரங்களாக எத்தனை புதிய குடிவரவாளர்கள் வரவழைக்கப்படுவார்கள் எனக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதில் 31% மான கனடியார்கள் 2016ம் ஆண்டில் கனடா ஏற்றுக்கொள்ளும் சுமார் 3 இலட்சம் புதிய குடிவரவாளர்களை விட குறைவானவர்களே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றனர்.
37% மானவர்களே அதேயளவு வரவழைப்பது சிறந்தது என்றனர். 16%மானவர்கள் கூடியளவு வரவழைக்கப்படவேண்டும் என்றனர். அரச பொருளியல் துறையினர் நாலரை இலட்சம் புதிய குடிவரவாளர்கள் அடுத்து வரும் வருடங்களில் வரவழைக்கப்பட வேண்டும் என்றனர்.
மறுபுறம் ஒரு பகுதியினர் இன்றைய பொருளாதார சுருக்க நிலையில் அதிகளவு புதிய குடிவரவாளர்கள் வரவழைக்கப்பட்டால் கனடாவில் வேலைவாய்ப்பு நாடி நிற்பவர்களுக்கு அது பாதகமாக இருக்கும் என்றனர்.
பொதுவாக குவரவு குடியகல்வுத் துறையோடு, பொருளியற்துறை தொடர்பு கொண்டுள்ளது.
கனடா வருடா வருடம் தனது மக்கட் தொகையில் ஒருவீதம் புதிய குடிவரவாளர்கள் வரவழைக்கப்படுவது பொருத்தம் என்கின்றனர். அவ்வாறாயின் இன்றைய கனடாவின் மக்கள் தொகை 36 மில்லியன் ஆகும். அபப்டியானால் வருடம் ஒன்றிற்கு சுமார் 3,60,000 புதிய குடிவரவாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும். கனடா அண்மைக்காலமாக தனது மக்கள் தொகையின் ஒருவீதத்திற்கு சற்று குறைவானவர்களையே ஏற்று வருகின்றது. உதாரணமாக 2014 ம் ஆண்டில் 0.7%மானவர்களாக இருந்தனர். ஆனால் 2013ம் ஆண்டில் 5.3% மாக இருந்தது. அன்று நான்கு இலட்சத்திற்கும் சற்று அதிகமான குடிவரவாளர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
அன்றைய மக்கள் தொகை 7.6 மில்லியனாக இருந்தது. இன்று குடிவரவு அமைச்சர் 2017 ல் சுமார் 300,000 புதிய குடிவரவாளர்களை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாவது எத்தகைய வகையில் இவர்களது வருகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தொழில்திறன், முதலீட்டு அடிப்படையிலானவர்களுக்கு என்றும் முதலிடம் வழங்கப்பட்டு வருகின்றது.
பொதுவாக இவர்களினால் தான் மனிதவள தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
அதுமட்டுமல்லாமல் பெருகிவரும் புதியவர்களால் உழைப்பாளிகளுக்கு எதிர்வரும் தசாப்தங்களில் பெரும் தட்டுப்பாடு ஏற்படவிருக்கின்றது.
இதனால் நடுத்தர வயதினர், கல்வி கற்றவர்கள், தொழில் அனுபவம் மிக்கவர் முன்னுரிமை பெறுகிறார்கள். இவர்கள் வருகை 2010 இல் 66.6% மாக இருந்தது.
அதற்கு முன்பு அது பாதிக்கும் குறைவாக இருந்தது. 1990 ஆம் ஆண்டளவில் அது 45% மாக் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக இவர்களுடன் முதியோர், சிறார் பராமரிப்பு போன்ற துறைகளிலும் கூடியளவு புதிய குடிவரவாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.
பொருளாதார துறையில் 2016 இல் எதிர்பார்க்கப்பட்டது 1,60,600 பேர், 2017 இல் 1,72,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களில் மத்திய அரசின் வகையில் 73,700 பெரும், சிறார், முதியவர் பராமரிப்பில் 18,800 பெரும், முதலீட்டடிப்படையில் 580 பெரும், மாநில சிபாரிசில் ஆனா தொழில்திறனாளர்கள் 51,000 பெரும், குவிப்பாக மாநில முதலீடு, தொழில்திறன் அடிபப்டையில் 29,300 பேருமாக ஒட்டுமொத்தம் 1,72,5000 பேர் அடங்குகின்றனர்.
இங்கு தொழில்திறன் அடைப்படையிலானவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெரும் பங்கை பெருகின்றனர்.
அடுத்தது ஒவ்வொரு மாநிலமும் தன் மனித வள தட்டுப்பாட்டினையும் அதேவேளை பொருளியல் திட்டங்களின் அடிப்படையிலும் மறுமுனையில் கல்வித்திறன் அடிப்படையில் உள்ளூர் தட்டுப்பாடுகள் என்பவற்றையும் அடிப்படையாக கொண்டு வரவழைக்கப்படுகின்றார்கள்.
இரண்டாவது வகையினர் குடும்ப இணைவின் கீழ் வரவரழைக்கப்படுவார்கள். இவர்களின் தொகையும் 2016 ம் ஆண்டை விட சற்று அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2016ல் திட்டமிட்டது 80,000 பேர், 2017 ல் அது 84,000 ஆகி உயர்ந்துள்ளது. இதில் கணவன் மனைவி, பிள்ளைகள் விடயம் தான் முன்னுரிமை பெறுகின்றது. அதனடிப்படையில் 64,00 பெரும், பெற்றோர், தாத்தா பாட்டி விடயத்தில் 20,000 ஆக ஒட்டு மொத்தத்தில் 84,000 பேர் வரவழைக்கப்படவுள்ளனர்.
இதில் பெற்றோர் வரவழைப்பில் 2017ம் ஆண்டிற்கான தகைமைகள் பற்றிய விபரங்கள் பின்னர் தரப்படும். கணவன்-மனைவி விடயத்தில் உள்ள தகமைகளில் மாறுதல்கள் பெரிதாக தென்படவில்லை.
மூன்றாவது வகையினர் அகதிகள். உலகளாவிய ரீதியில் சுமார் 600 மில்லியன் மக்கள் தம் சொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களது தொகை வெள்ளம் மடை திறந்து ஓடுவது போலுள்ளது. இவர்களை ஏற்கக்கூடிய நாடுகள் சென்ற ஆண்டின் பிற்பகுதியிலும், இவ்வாண்டின் முற்பகுதியில் பெரும் அக்கறை காட்டினர். பின்னர் இரு காரணங்களால் பின்வாங்காத தலைப்பட்டனர்.
முதலாவது வந்த அகதிகள் தேசிய கலாச்சாரம், பழக்கவழக்கம், இணைவு என்பவற்றில் காட்டப்படாத அக்கறை, இணைவு ஓர் காரணம். இரண்டாவது காரணம் வந்த கைதிகளில் சிலர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருத்தல் ஆகும்.
இந்த அகதிகளில் 15,000 கனடாவில் அகதிகளாக ஏற்கப்பட்டவர்களும் அவர்களது வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களும் ஆவர்.
இரண்டாவது வகையினர் 25,000 அகதிகளாக மீள்குடியமர்த்தப்பட்டவர்கள். மூன்றாவது வகையினர் அரச அனுசரணையுடன் வரும் அகதிகள். இவர்கள் 7,500 பேர் ஆவர். அகதிகள் 16,000 பேராவர்.
இவர்களைவிட அகதிகள் எனும் நிலைக்கு தகமையிழந்தவர்கள், மற்றும் மனிதாபிமான, ஜிவகாருண்ய அடிப்படையிலானவர்கள் 3,400 பேர் ஏற்றுக் கொள்ளப்படவிருக்கிறார்கள். இவர்கள் கனடாவின் சட்ட திட்டங்களுக்கு அமைய வாழப்பவர்கள்.
சமுக நல நிதியுதவியில் நீண்ட காலம் தங்கியிருக்காதவர்கள். குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபாடு கொள்ளாதவர்கள். அத்துடன் சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் எனப் பலவகையினர் பயனாக சுமையில்லாத மக்கள் அடங்குவர்.
இவர்களை விட வெளிநாடு மாணவர்கள் வருகையும் ஊக்குவிக்கப்படுகின்றது. கனடிய பிரதமரும், குடிவரவு,குடியகல்வு அமைச்சரும் சீனாவிற்கு விஜயம் செய்த போது அவர்கள் வருகையை ஊக்குவித்தனர். இவர்கள் வருகையில் சீனா பெருமளவு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
அதற்கு மற்றுமொரு காரணம், கனடா இவ்வாறாக வரும் கெட்டிக்கார மாணவர்களை கவரும் வகையில் தொழில் வாய்ப்புக்களை நல்கி இந்நாட்டில் நிரந்தர வதிவுரிமை வழங்கி தங்க வைக்கிறார்கள். இதனால் புத்திசாலித்தனமானவர்கள் பங்களிப்பு தன்நாட்டில் இல்லாமல் போய்விடும் எனது தயக்கம் காட்டுகின்றது.
பெற்றோர் வருகையில் சுப்பர் விசா, இதற்கான எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இல்லை. இவர்கள் நீண்டகால தற்காலிக விசா கொண்டவர்கள். இவர்கள் வருகையும் தொடவுள்ளது. இவர்களால் அரச செலவினங்கள் அதிகரிக்கப்போவதில்லை.
இவர்களுக்கென மருத்துவ இலவச சேவையும் வழங்கப்படுவதாக இல்லை. அவர்கள் கனடிய தொழில் பங்குகொள்ளப் போவதும் இல்லை.
இவர்கள் ஏற்கனவே முதியவர்களாக அல்லது அந்நிலையை அணுகுபவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களோடு தற்காலிக உல்லாசப் பிரயாணிகளாக வருபவர்கள், இவர்கள் வருகையில் ஒரு தாராள பங்கு காணபப்டுகின்றது. வரவழைப்பவர் பொருளாதாரம், குறிப்பாக வருவாய்த் தகமை, வரவிருப்பவர் குறிப்பிட்ட கால்வரையறைக்கு பின் திரும்பி செல்வார், கனடாவில் நிரந்தரமாக தங்க மாட்டார் என்ற உத்தரவாதத்தையும் எதிர்பார்க்கபப்டுகிறது.
இவ்விரு தகைமையோடு வெளிநாட்டுப் பிரயாணம் பின்னணியும் மற்றும் ஓர் அம்சமாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்கூட்டி விசா பெறாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாவிடினும் அவ்வப் போது வரையறைகள் வருவதும் உண்டு.
குடியுரிமை, தகமை, பெற்றோரை வரவழைப்பதின் மாறுதல்கள், தற்காலிக ஒப்பந்த ஊழியர் வருகை ஆகிய நிலைபற்றி மற்றுமொரு கட்டுரையில் எதிர்பாருங்கள்.
Tamilsguide
canada