தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 november 2016

நாடு திரும்பும் அகதிகளுக்கு சலுகைகளா? மீண்டும் 20 அகதிகள்!

இந்தியா-தமிழ்நாட்டில் உள்ள மற்றுமொரு தொகுதி இலங்கை அகதிகள் இந்த மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே 20 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.
10 குடும்பங்களைச் சேர்ந்த 20 இலங்கை அகதிகளே சென்னையில் இருந்து ஸ்ரீலங்கா ஏயார் லயன்ஸ் விமானம் மூலம் கொழும்பை வந்தடைவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கை அகதிகள் அவர்களின் சொந்த இடங்களான வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு திரும்பும் அகதிகளுக்கு விமான பயணச்சீட்டு, போக்குவரத்து கொடுப்பனவு, உணவு நிவாரணம் ஆகியவற்றை ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமேவழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும் என வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு திரும்பும் இலங்கை அகதி ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதாரமாக வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில் இருந்து ஆயிரத்து 1895 குடும்பங்களைச் சேர்ந்த 5,205 குடும்பங்கள் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
109 நலன்புரி நிலையங்களில் 64 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் இருப்பதாகவும் அதுமட்டுமன்றி, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்துவருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten