தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 november 2016

நாளைய தினம் கொழும்பை அழித்து பெரும் இரத்தக் களரியாம்??

முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வந்த டான் பிரியசாத் எனப்படும் போதைப் பொருள் வர்த்தகர் நேற்று மாலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழித்து மாபெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்தவுள்ளதாக ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, இனவாதக் கருத்துக்கள் தொடர்பில் கிழக்கை மையமாகக் கொண்ட மூத்த முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரும், கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் அரசியல் கட்சியொன்றின் தலைவருமான இரண்டு அமைச்சர்கள் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கை காரணமாகவே டான் பிரியசாத் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் டான் பிரியசாத்தின் கைது நடவடிக்கை குறித்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையாக கொந்தளித்துள்ளார்.
நாளைய தினத்துக்குள் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் அப்துர் ராசிக்கை கைது செய்யத் தவறும் பட்சத்தில் மாளிகாவத்தை தொடக்கம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அழித்து பெரும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்த உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று மாலை தொடக்கம் நாடெங்கிலும் இருந்து சிங்கள இளைஞர்கள் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா தலைமையகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
நேற்றையதினம் முன்னிரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அவ்வாறாக ஏராளமான வெளி மாவட்ட இளைஞர்கள் கொழும்புக்கு வருகை தந்துள்ளனர்.
ஏதேனும் அசம்பாவிதம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவர்கள் கொழும்புக்கு வருகை தந்திருப்பதாக அஞ்சப்படுகின்றது.


Geen opmerkingen:

Een reactie posten