அன்றாடம் தற்போது பகிரங்கமான முறையில் இனவாதம் பரப்பப்பட்டு வருகின்றது, அவற்றின் பின்னணியில் பிக்குமார்கள் இருந்து செயற்பட்டு வருவது ஆதார பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இன்று அநுராதபுரத்தில் பிக்குகள் தலைமையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, குறித்த கூட்டத்தில் இளைஞர் ஒருவர் உரை நிகழ்த்துகின்றார்,
அவரது உரை மேற்கண்டவாறு அமைகின்றது,
நாட்டில் முஸ்லிம் இனத்தவர் தற்போது இனவாதத்தினை பரப்பி வருகின்றார்கள், அவர்களை அடக்கி ஒடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு சிங்களவர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இது வரையில் பொறுத்திருந்தது போதும் அடித்து விரட்ட வேண்டும் அவர்கள் அனைவரையும், நாட்டில் தற்போது பள்ளிவாசல்கள் ஊடாக தீவிரவாதமானது கற்று கொடுக்கப்படுகின்றது, அதேபோல் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் தற்போது இலங்கையில் உள்ளனர்.
இன்னுமொரு பிரபாகரன் உருவாகும் வரையில் நாம் பொறுமையாக இருப்போமானால் சிங்களவர்களின் தலைகளை வெட்டி எடுக்கும் நிலை உருவாக்கப்பட்டு விடும் என்பதனை அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்.
சக்தி மிக்க சிங்கள இளைஞர்களே, அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள், உங்களுக்கு பலம் உள்ளது, தற்போது எனக்கு படைகள் அவசியமாகின்றது. எம்முடன் அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள்.
இந்த நாட்டினை கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்கள் ஆக்ரமித்து கொண்டிருக்கின்றார்கள், அனைவரும் பொறுமையாக இருக்கின்றார்கள் இப்படியே இருந்தோமானால் இலங்கையில் இருந்து அனைத்து சிங்களவர்களும் அழிக்கப்படுவார்கள்.
என்றவாறு சிங்கள மக்களிடையேயும், இளைஞர்களிடையேயும் முற்றிலும் வெறி ஏற்படுத்தும் வகையில் அவர் உரை நிகழ்த்தி உள்ளார்.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்ட ஓர் இடத்தில் இவ்வாறான உரையினை அவர் நிகழ்த்தியுள்ளார். இதனை கேட்டு கொண்டிருக்கும் இளைஞர்கள் மன நிலை எவ்வாறு அமையும், அடுத்த கட்டம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இது வரையில் வெளிப்படை இல்லை.
ஆனாலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசு தரப்பு மௌனமாக இருப்பதும், அனுமதியும் கொடுத்து கொண்டிருப்பதும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இவற்றினை உடனடியாக பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகின்றது எனவும் கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/statements/01/124635?ref=morenews
http://www.tamilwin.com/statements/01/124635?ref=morenews
Geen opmerkingen:
Een reactie posten