இலங்கை தமிழர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார்.
தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இந்த படுகொலை முயற்சியின் விசாரணைகளை பாரிஸ் இரண்டாவது பிரிவின் சட்டவியல் பொலிஸாரினால் மிகவும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் இலங்கை தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்நாட்டு பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவம் தமிழ் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பழிவாங்கள் மோதல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சம்பவ தினத்தில் அங்கு இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஒருவர் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten