தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 november 2016

இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் சுவிட்ஸர்லாந்து முக்கிய முடிவு..!

சுவிட்ஸர்லாந்தில் அதிக தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்புவது தொடர்பில் இலங்கை மற்றும் சுவிஸ் அரசாங்கங்களுக்கு இடையில் அண்மையில் உடன்படிக்கை ஒன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் அகதிகளை திருப்பியனுப்புவது தொடர்பில் எப்படியான நடைமுறைகளை சுவிஸ் அரசாங்கம் கையாளப்போகின்றது என்பது தொடர்பிலான குழப்பங்கள் நீடித்துள்ளன.
இந்நிலையில், சுவிஸ் நாட்டின் நீதியமைச்சருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள 3 முதல் நிலை செயலாளர்களை, சுவிஸ் நாட்டின் ஜனநாயக சோசலிஷ கட்சியின் உறுப்பினரும் தூண் நகரசபை உறுப்பினருமான தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து லங்காசிறி 24 செய்தி சேவையுடன் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு அவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten