தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 18 november 2016

புலம்பெயர் தமிழர்களுக்கு ரணில் வைத்திருக்கும் ஆப்பு? வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு!

உலகில் வெற்றிகளைக் குவிப்பதற்காக இரண்டு வழிகளைப் பயன்படுத்துவார்கள். ஒன்று போர், இரண்டாவது ராஜதந்திரம்.
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் பகைமை ஏற்படுகின்றது. பாரதப்போர் நாட்டையே ரத்தக்காடாக்க காத்திருக்கிறது.
எனினும் அப்போரானது பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கானதும் அல்ல. அது பாண்டவர்களின் வெற்றியையோ, கௌரவர்களின் வெற்றியையோ பிரதிபலிப்பதற்காகத் தான் என்று நாம் எடுத்துக் கொள்வது மகா தவறு.
மகாபாரதம் என்னு காவியம் கிருஸ்ணனின் தந்திரத்திற்கும், சகுனியின் மகாதந்திரத்திற்கும் இடையிலான போட்டி. அவர்களின் திறமையை வெளிப்படுத்த பாண்டவர்கள், கௌரவர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பதை அணுகியாராய்வது சாலச்சிறந்தது.
இவ் உலகத்தில், சகுனியைப் போன்ற ராஜதந்திரியை வேறெங்கும் காண இயலாது. மனிதனாய்ப் பிறந்த சகுனியின் ராஜதந்திரத்தோடு மோதுவதற்கு அந்த விஸ்ணு பகவானே மனித அவதாரமாக கிருஸ்ணன் பெயர் கொண்டுவர வேண்டியதாயிற்று.
ஆயினும் தர்மத்தை நிலைநாட்டவே இந்த அவதாரம் என்கிறது வைணவ சமயம்.
இவ்விடத்தில் எதற்கு மாகாபாரதக் கதை என்று யாரேனும் கேட்கலாம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
இலங்கையில் யுத்த ஆயுதங்கள் கொண்டு நடத்தப்பட்ட போர், இப்பொழுது புத்தி ஆயுதங்கள் கொண்டு நடத்தப்படுவதனை காணமுடிகின்றது.
இலங்கையில் உள்ள மகாஞானிகளில், ராஜதந்திரிகளில் இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிகர் அவர் தான் என்றால் அது மிகையன்று.
காலத்திற்கு ஏற்றால் போல தன் அரசியல் நகர்வுகளை மாற்றுவதில் கைதேர்ந்தவர் ரணில் விக்ரமசிங்க.
உலக அரசியல் நகர்வுகளின்படி, தன்னுடைய இலக்கை சரியாக நகர்த்துவதிலும், திட்டங்களை வகுப்பதிலும் அவர் தோல்வி கண்டதில்லை.
உலகில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகள் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு சாதகமான நிலமைகளை ஏற்படுத்தும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருக்கிறது இலங்கை அரசாங்கம்.
கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு, அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளில் புதுமாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
உலகில் உள்ள அத்தனை பயங்கரவாத அமைப்புக்களுக்கும் எதிரான போர் என்று அறைகூவல் விடுத்தது அமெரிக்கா. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் உலகில் உள்ள போராட்ட அமைப்புக்களை எல்லாம் பயங்கரவாத அமைப்புக்களாக பட்டியில் போட்டது. அதில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அடங்கும்.
அக்கால கட்டத்தில் விடுதலைப் புலிகள் இலங்கையில் பலமாகவும், இலங்கை அரச படைகள் பல்வேறு தோல்விகளைச் சந்தித்த காலமது.
இக்கட்டான சூழலில் புலிகள் மீதிருந்த தடையை நீக்கி அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவந்தது இலங்கையும், இந்தியாவும். அடுத்த ஆண்டிலேயே பிரதமராக ரணில் பொறுப்பேற்றார்.
புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஆனால், அந்த சமாதான ஆண்டில், புலிகளை எவ்வாறு அழிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, புலிகளின் பகுதிகளுக்கு, புலனாய்வாளர்களையும், கூலிப்படைகளும் அனுப்பப்பட்டது.
இதேவேளை, கருணா அம்மான், பிள்ளையான் போன்றவர்களை ரணில் பிரித்தெடுக்கவும் வழிவகுத்தார்.
கடந்த 2009ம் ஆண்டில் நடந்த போரில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னால் இன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார் என்றால் அது மறுக்கமுடியாத, வரலாற்றில் மாற்ற முடியாத உண்மை.
லக்ஷமன் கதிர்காமர், மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க போன்றவர்களின் சர்வதேச அரசியல் அனுபவங்களும், இலங்கையின் சிறந்த அரசியல் பார்வையும் விடுதலைப் புலிகளை இலங்கையிலும், வெளிநாடுகளிலும் நசுக்குவதற்கு பெரிதும் துணைநின்றது.
2001ம் ஆண்டிற்குப் பிறகு மாறிய சர்வதேச அரசியல் அணுகுமுறை அல்லது, பார்வை மீண்டும் 2016ல் மாறியிருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்பட்ட மாற்றம், உலகில் உள்ள பல நாடுகளில் வெளிநாட்டுக் கொள்கைகளில் தாக்கத்தினைச் செலுத்தும்.
இதில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்கப்போவது அந்தந்த நாடுகளில் அரசியல், அகதிகள் தஞ்சம் கோரியவர்கள் தான்.
குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் அதிகளவில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஏனெனில், இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நல்லாட்சி தொடர்ந்து நடந்து வருவதை வெளிநாடுகளுக்கும், ஐக்கிய நாடுகளுக்கும் காட்ட வேண்டிய தேவை பிரதமர் ரணிலுக்கு உண்டு.
இப்பொழுது புதிய ஒழுங்கில் வரும் சர்வதேச விவகாரங்களைச் சாதகமாகக் கையாள விளையும் பிரதமர், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று முகாம்களிலும், வேறு இடங்களிலும் அரசியல் தஞ்சம் கோரியவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கக் கூடும் என்கிறார்கள் தென்னிலங்கையில் இருக்கக் கூடிய மூத்த ஊடகவியலாளர்கள்.
ஏனெனில், கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை மிக, மிக அதிகம்.
நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையும், நல்லிணக்கத்தையும் அரசாங்கம் விரைவாக மேற்கொண்டுவருவதாகவும் சர்வதேசத்திற்கு காட்ட வேண்டிய தேவையிருக்கிறது அரசாங்கத்திற்கு.
சர்வதேச நிறுவனங்களைக் கொண்டு இலங்கையில் அபிவிருத்திகளையும், மீள்கட்டுமானங்களையும் மேற்கொண்டுவருவதனை உலகத்திற்கு நிரூபித்தாகவேண்டிய சூழலில் இருக்கிறது.
இதனால், பிரதமர் மாறிவரும் உலக அரசியல் நிகழ்ச்சி நிரலை உண்ணிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார். அவரின் அடுத்தடுத்த நகர்வுகள், இலங்கையை சர்வதேசத்தின் முன்னால் நற்பெயர் கொண்ட நாடாக மாற்றுவது தான்.
அதற்கான சகல முயற்சிகளும் மேற்டிகொள்ளப்பட்டுவருகின்றன. உண்மையில் ரணில் விக்ரமசிங்கவின் இந்த நகர்வுகள் மறைமுகமானவை.
தமிழர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்பபோகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏனெனில் மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக தாக்கினால், ரணில் விக்ரமசிங்க அமைதியான முறையில் தாக்குவார். அவரின் ராஜதந்திரத்திற்கு முன்னால், எல்லாமே புஷ்வானாம் தான்.
அன்று அமெரிக்காவில், ஏற்பட்ட மாற்றத்தைப் பயன்படுத்திய ரணிலுக்கு இன்று மீண்டும் அதே அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை சரியாக கையாளச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
காலத்திற்கு ஏற்றால் போல சிங்கள அரசியல் தலைமைகள் தங்கள் நகர்வுகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றை ஒன்று குறைகூறிக்கொண்டும், அழித்துக்கொண்டும், பதவியாசை கொண்டும் இனத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து வேண்டுமானால் தப்பித்திருக்கலாம். இந்நாள் பிரதமரிடம் இருந்து தப்பிப்பது மிகமிக கடினம். எல்லாமே நமக்கு கிடைப்பதைப்போன்று இருக்கும் ஆனால் கிடைக்காது.
நாட்டில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதைப்போன்று தெரியும் ஆனால் சுதந்திரம் வராது. வெளியில் நல்லதாய் தோன்றும். உள்ளே யானை உற்கொண்ட பழம் போல இருக்கும்.
இனிவரும் காலங்களில் நடக்கும் போர் ஆயுதங்கள் கொண்டல்ல. மதிகொண்டு வெல்லப்படவேண்டியவை. மாறிவரும் சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலை தமிழர் தரப்பு சரியாகக் கையாளவில்லையாயின் கையாலாகத இனமாக உலகில் திகழும் என்பதை மாற்ற முடியாது.
சிந்திப்பதும், செயலாற்றுவதும் ராஜதந்திரத்தைக் கைக்கொண்டு செயற்படுத்துவதும் எங்கள் மூத்த தலைவர்களிடத்திலும், சட்டத்தரணிகளிடத்திலும் இருக்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten