கொழும்பில் நேற்று மும்மொழிகளிலும் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான திருமண பந்தம் பற்றி ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து ஆளுநனர் ஆரம்பத்தில் தம்மிடம் வினவியதாகவும், திருமண தொடர்பை விட தமிழர்களின் தேவைகளையும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியையும் முதலில் பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
மேலும், தமது இரு பிள்ளைகளும் சிங்களவர்களையே திருமணம் முடித்திருப்பதையும் இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நினைவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten