சிரியாவில் சிறை பிடிக்கப்பட்ட இராணுவத்தினரை, புரட்சிப்படையினர் தலையில் சுட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புரட்சிபடையினரால் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அனைத்து வீரர்களும் உடைகளை அகற்றிய நிலையில் கைகளைக் கட்டி, தரையில் கீழே தள்ளி விடப்படுகின்றனர்.
பின்னர் அவர்களுக்குப் பின்னால் நின்று கொள்ளும் புரட்சிப் படையினர், துப்பாக்கிகளால் அவர்களை சுட்டுத் தள்ளுகின்றனர்.
இந்தத் தண்டனைக்கு முன்பாக புரட்சிப் படையினரின் அப்துல் சமத் இஸ்ஸா, முதலில் ஒன்றை வாசித்து துப்பாக்கி சூட்டை ஆரம்பித்து வைக்கிறார்.
இவர் பேசுகையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக இவர்கள் ஊழல்வாதிக்கும், ஊழலுக்கும் துணை போயிருக்கிறார்கள்.
கடவுளின் பெயரால் நாம் உறுதி எடுக்கிறோம், நாம் பழி தீர்ப்போம் என்று கூறுகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இச்சம்பவத்தை, வீடியோவாக புரட்சிபடையினரே படமாக்கியுள்ளனர்.
தற்போது புரட்சி படையினரின் செயலால் மனம் அதிர்ந்து போன நபர் ஒருவர், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten