தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 september 2013

ஐ.நா அறிக்கை விடுதலைப் புலிகளை சாதாரண அமைப்பு என்றே குறிப்பிட்டுள்ளது: குமுறும் அமைச்சர் பீரிஸ்




பாதுகாப்பு தரப்பினர் குறித்து மக்கள் சாட்சியங்களை வழங்கிய போதும், அது தொடர்பாக ஒரு நல்லெண்ண வார்த்தை ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு கலதாரி விடுதியில் நடைபெறும் இராணுவ கருத்தரங்கில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் சிலர் தவறான தகவல்களையும் தவறான வரைவிலக்கணங்களையும் வழங்கியுள்ளனர்.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் வடக்கில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள போதும், அப்படியான எந்த குற்றச் செயலும் அங்கு இடம்பெறவில்லை. அத்துடன் மறைப்பதற்கு எதுவும் மீதமில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பை மிலேச்சத்தனமாக அமைப்பு என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அந்த அமைப்பு ஒரு சாதாரண அமைப்பு மட்டுமே என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் பலருக்கு ஐக்கிய நாடுகளின் அறிக்கையை காணமுடிந்தது. எனினும் அந்த அறிக்கையை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் உள்ள விடயங்களை ஒரு தரப்பினர் மட்டுமே ஏற்றுக் கொண்டனர்.
இலங்கை என்பது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக 6 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலை மாத்திரம் நடத்தும் நாடு கிடையாது. கடந்த 8 வருடங்களில் 11 தேர்தல்களை நடத்திய நாடு இலங்கை. இதன் மூலம் உலக மக்களிடம் இலங்கை தொடர்பிலான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTYMWkq5.html#sthash.YgIQBCmp.dpuf

Geen opmerkingen:

Een reactie posten