தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 september 2013

இனவாதத்தில் பாடம் கற்றாலும் சிலர் இன்னும் அதனை கைவிடவில்லை: தம்பர அமில தேரர்


இனவாதத்தினால் பாதிப்புகளை எதிர்நோக்கி பாடங்களை கற்றுக்கொண்டாலும் சில இனவாத அரசியல்கட்சிகள் இனவாதத்தை இன்னும் கைவிடவில்லை என்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில இனவாத கட்சிகளும், அரசியல் தலைவர்களும் தமது அதிகார இருப்பை தற்காத்து கொள்வதற்காக இனவாதத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்கள் ஆகிய இரண்டும் இலங்கையின் தேசியப் பிரச்சினை மற்றும் அதன் அழுத்தங்கள் காரணமாக ஏற்பட்டவை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இனவாத கட்சி என்றும் நவநீதம்பிள்ளையை மேற்குல நாடுகளின் முகவர் என்றும் கண்டிக்காது, ஆழமாக சிந்ததித்து அவர்களின் கருத்துக்கள் குறித்து ஆராய வேண்டும்.
இது அவர்களின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் ஆதரிப்பதாக அமையது. எனினும் இவை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டிய சூழலில் காணப்படுகிறது.
இலங்கையின் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூன்று பிரதான இனங்கள் வாழ்கின்றன. இந்த சகல இனங்களும் ஒரு நாட்டின் இனமாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான உரிய செயற்பாடுகளை எவரும் மேற்கொள்ளவில்லை.
பிரித்தானியர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்னர் நாட்டை முதலலாளித்துவ பொருளாதாரத்திற்குள் கொண்டு சென்றனர். அத்துடன் இனங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி இனவாத ரீதியான ஆட்சியை நடத்தினர்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் நிர்வாக முறைகளை ஏற்படுத்தும் போது, ஆங்கிலேயர் இனவாதத்தை பயன்படுத்தினர். இதனால் இலங்கையில் சகரல இனஙகளும் தம்மை தனித்து அடையாளப்படுத்தி கொண்டதுடன் இலங்கையர் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனை நாட்டை ஆட்சி செய்த முதலாளித்துவ அரசாங்கங்கள் மேலும் அதிகரிக்க செய்தன என்றார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTdMWit2.html#sthash.C2afE6Wn.dpuf

Geen opmerkingen:

Een reactie posten