தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 september 2013

புலிகள் எனக்கு காசு தந்தார்களா ? நவிப்பிள்ளை பேட்டி (வீடியோ)

நான் ஒரு இந்திய வம்சாவளி தமிழ் பெண் என்பதனால், இலங்கையில் உள்ள பல அமைச்சர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் என்னைப் பற்றி தவறாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறது என்று நேரடியாகச் சாடியுள்ளார் நவிப்பிள்ளை. தான் புலிகளிடம் சம்பளம் பெறுவதாக இலங்கையில் உள்ள 3 அமைச்சர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார்கள். இது ஒரு குற்றச்செயலாக அமைகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் பலரைக் கொன்றுள்ளார்கள் என்றும் கூறியுள்ள நவிப்பிள்ளை, புலம்பெயர் தமிழர்களே புலிகளை தூக்கிவைத்து கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார். தான் 1999ம் ஆண்டு நீலன் திருச்செல்வத்தின் அழைப்பில் இலங்கை வந்ததாக குறிப்பிட்ட அவர், புலிகளே நீலன் திருச்செல்வத்தைக் கொன்றார்கள் என்றும் சாடியுள்ளார்.

வெலிகடைச் சிறை மற்றும் வவுனியா சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் மற்றும் வெல்வெரியா பிரதேசத்தில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக அரசாங்கம் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பது போல சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்பதனை அவர் இதுவரை அழுத்தம் திருத்தமாக எந்த ஒரு இடத்திலும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்க விடையம் ஆகும். இலங்கையே தனது குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பது போன்றதொரு தோற்றப்பட்டை அவர் வெளியிட்டு வருகிறார். இருப்பினும் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் அவர், இலங்கை அமைச்சர்களை கடுமையாகச் சாடியுள்ளார். 

தான் புலிகளிடம் பணம் பெற்று வருவதாக கூறிவரும் இலங்கை அதிகாரிகளை அவர் குறிவைத்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 



http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5578

Geen opmerkingen:

Een reactie posten