தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 september 2013

இலங்கையைச் சீண்டும் வெளிநாட்டு சக்திகள்- சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்: விமல் வீரவன்ச

முப்பது வருடங்கள் நாட்டை பீடித்த யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்ததால், அதனை சகிக்க முடியாத வெளிநாட்டு சக்திகள் ஐநாவின் போர்வையில் இலங்கை சீண்டி வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

கண்டி பூஜாப்பிட்டிய நகரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவிததார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கிலாந்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை வெள்ளையர்கள் தீயிட்டுள்ளனர். அச்சம்பவத்தின் போது அந்நாட்டு முஸ்லிம்கள் பொறுமையாக இருந்ததற்கு பொலிஸார் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் நாடுகளுக்கு செல்லாமல் ஐ.நா.வின். மனித உரிமை ஆணையாளர் இங்கு வருவது நியாயமா?.
முப்பது வருடங்கள் எம்மை பீடித்த யுத்தத்தை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டு வந்தார். இதனை சகிக்க முடியாத வெளிநாட்டு சக்திகள் ஐநாவின் போர்வையில் எமது நாட்டை சீண்டுகின்றன.
ஐநாவின் மனித உரிமைகள் பிரிவின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்து நாங்கள் பெற்ற யுத்த வெற்றியை திசை திருப்ப முயற்சிக்கினறார்
பிரபாகரன் உட்பட புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நந்திகடல் பகுதியில் மலர் வைக்க முயற்சித்ததிலிருந்து “பிள்ளை”யின் சுயரூபம் தெளிவாகியுள்ளது.
2015 அல்லது 2016 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது ஸ்திரமற்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பணயக்கைதியாக்கி யுத்தத்தால் பெற முடியாது போனதை அரசியல் மூலம் பெற்றுக் கொடுக்க சர்வதேச சக்திகள் கடுமையாக பாடுபட்டு வருகின்றன என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- அமைச்சர் வீரவன்ஸ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
கண்டி செங்கடகல பௌத்த கலாசார நிலையத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார். 
சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான உந்து சக்தியை கொடுத்துள்ளார்.
ஆயுதங்களை கையில் எடுத்தால், சமஷ்டி அதிகாரத்திற்கு அப்பால் சென்ற அதிகாரத்தை பெறமுடியும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் புலனாய்வு பிரிவினரும், இரகசிய பொலிஸாரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
 See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmuz.html#sthash.beSlBJTV.dpuf

Geen opmerkingen:

Een reactie posten