தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 september 2013

தமிழீழத்தை உருவாக்கும் பொறிமுறையிலேயே நவிப்பிள்ளை: கோத்தபாய

“தமிழீழத்தை உருவாக்கும் பொறிமுறையிலேயே நவிப்பிள்ளை வந்தார்” நல்லிணக்கம் சவாலானது கோத்தபாயதமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் நிரா­யுத பொறி முறையில் நாடு கடந்த விடு­தலைப் புலி ஆத­ர­வா­ளர்கள் மேற்­கு­லக நாடு­களின் அனு­ச­ர­ணை­யுடன் செயற்­ப­டு­கின்­றனர். இவர்கள் இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­ சாட்­டுக்­க­ளையும் சாட்­சி­யங்­க­ளையும் உரு­வாக்­கி­யுள்­ளனர். இவற்றின் நிழ­லா­கவே ஐ. நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் நிகழ்ச்சி நிரலும் காணப்­பட்­டது என்று பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.இறுதி யுத்­தத்தின் போது வெறும் 26 பேர் மாத்­தி­ரமே இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்து காணாமல் போன­தாக தக­வல்கள் உள்­ளது. பல்­லா­யிரம் பேர் காணாமல் போயுள்­ள­தாக கூறு­வது புலம்­பெயர் விடு­தலைப் புலி ஆத­ர­வா­ளர்­களின் திட்­ட­மிட்ட இலங்­கைக்கு எதி­ரான போலி பிர­சார நட­வ­டிக்­கையே தவிர வேறு ஒன்றும் இல்லை இத­னையே உள்­நாட்டு வெளி­நாட்டு ஊட­கங்­களும் பெரி­தாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன.தற்­போது இலங்கை பல்­வேறு புதிய சவால்­களை எதிர்­கொள்ளும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. பல்­வேறு குழுக்கள் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் இருந்து கொண்டு இலங்­கைக்கு எதி­ராக செயற்­பட முனை­கின்­றன. குறிப்­பாக முஸ்லிம் அடிப்­படை வாதம் இலங்கை முஸ்­லிம்­களை ஆக்­கி­ர­மிக்க முயற்­சிக்­கின்­றது. இவ்­வா­றான செயற்­பா­டுகள் தேசிய பாது­காப்பை அச்­சு­றுத்­து­வதால் புதிய உபா­யங்கள் மற்றும் பாது­காப்பு பொறி­மு­றை­களை இரா­ணுவம் கையாள வேண்­டி­யுள்­ளது.பாதுகாப்புக்கு சீனாவின் நட்பு சீனா­வுடன் இலங்கை நட்பு வைத்துக் கொள்­வ­தாலோ சீனா இலங்­கையில் செயற்­ப­டு­வ­தாலோ எவ்­வி­த­மான பிரச்சி­னையும் இந்­தி­யா­விற்கு ஏற்­ப­டாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.சர்­வ­தேச பாது­காப்பு செய­ல­மர்வின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் கலந்­து­கொண்டு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை உரை­யாற்­று­கை­யி­லேயே பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராபக்ஷ மேற்­கண்­ட­வாறு கூறினார்.இலங்­கையில் உள்­நாட்டு பயங்­க­ர­வாதப் போர் முடி­வ­டைந்­ததன் பின்னர் தேசிய பாது­காப்பு அபி­வி­ருத்தி மற்றும் நல்­லி­ணக்கம் போன்ற விட­யங்­களை முன்­னோக்­கியே அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அமைந்­தன. யுத்தம் முடி­வ­டைந்து மிகக் குறு­கிய காலத்­திற்குள் வடக்கு மற்றும் கிழக்கை முழு அளவில் மீள் கட்­டு­மானம் செய்து பாதிக்­கப்­பட்ட மக்கள் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். ஆரம்ப காலக் கட்­டத்தில் இரா­ணுவம் வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் நிர்­வா­கத்தில் பங்கேற்றிருந்த போதிலும் தற்­போது அந்­நிலை முற்­றாக மாற்றம் அடைந்­துள்­ளது என்றார்.1983 ஆம் ஆண்­டு­களில் ஜே. வி. பி. யின் போராட்­டத்­தினால் பாதிக்­கப்­பட்ட தேசிய அபி­வி­ருத்­தி அதற்கு பின்னர் விடு­தலைப் புலி­க­ளினால் மூன்று தசாப்த கால­மாக அழிக்­கப்­பட்­டது. இன்று முழு அளவில் ஜன­நா­யகம் ஸ்தாபிக்­கப்­பட்டு அமை­தி­யான சமா­தான சூழல் நாட்டில் காணப்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் உண்­மை­யான நிலை­யினை உணர்ந்து தமது வாழ்க்­கையை அமை­தி­யாக கழிப்பதாகக் கூறினார்.இதனை சீர­ழிக்கும் வகையில் தற்­போது பல்­வேறு செயற்­பா­டுகள் நடை­பெற ஆரம்­பித்­துள்­ளது. குறிப்­பாக புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­களும் தப்­பி­யோ­டிய விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­களும் இலங்­கைக்கு எதி­ராக கடு­மை­யான செயற்­பா­டு­களை பரந்­த­ளவில் முன்­னெ­டுக்­கின்­றனர். விடு­தலைப் புலி­களின் சர்­வ­தேச வலை­ய­மைப்பு இன்னும் இலங்­கைக்கு எதி­ராக போராடி வரு­கின்­றது. ஐ. நா. மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை இலங்­கையில் வெளி­யிட்ட கருத்­துக்­க­ளுக்கும் விடு­தலைப் புலி­களின் ஆத­ரவுக் குழுக்­களின் பிர­சா­ரங்­க­ளுக்கும் இடையில் வேறு­பா­டுகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.விடு­தலைப் புலிகள் இலங்­கையில் அப்­பாவி பொது­மக்­களை குண்­டுகள் வைத்து கொலை செய்­ததை யாருமே பேச­வில்லை. ஆனால் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை மூலம் விடு­தலைப் புலி­க­ளிடம் சிறைப்­பட்டு கிடந்த பொது­மக்­களை மீட்ட பின்னர் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக போர்க் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் மனித உரி­மைகள் மீறல்கள் என பல்­வேறு பிர­சா­ரங்கள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.காணாமல் போனவர்கள் என்பது புலிப்பிரசாரம் இறுதி யுத்­தத்தின் போது பல்­லா­யிரம் பேர் காணாமல் போனார்கள் கொலை செய்­யப்­பட்­டார்கள் எனக் கூறு­வ­தெல்லாம் விடு­தலைப் புலி ஆத­ர­வா­ளர்­களின் போலி பிரசா­ரமே தவிர உண்மை தன்மை இல்லை. இலங்கை அபி­வி­ருத்­தியை நோக்கி செல்­கின்­றது. இதற்கு தடை­யாக விடு­தலைப் புலி ஆத­ர­வா­ளர்கள் மாத்­திரம் அல்ல பல்­வேறு குழுக்­களும் செயற்­ப­டு­கின்­றன. இவற்றை இனம் கண்­டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.குறிப்­பாக முஸ்லிம் அடிப்­படைவாத அமைப்­புக்­களின் செயற்­பா­டுகள் இலங்­கையில் தீவிரம் கண்டு வரு­கின்­றது. இலங்­கையர் என்ற அடை­யாளம் உள்­நாட்டில் காணப்­பட வேண்­டுமே தவிர மதம் மற்றும் இன ரீதி­யான பிள­வுகள் அல்ல. உலக அடிப்­ப­டை­வாத முஸ்லிம் அமைப்பு இலங்கை முஸ்­லிம்­களின் அடை­யா­ளங்­களை பிரிப்­பதால் அவ் இனம் நாட்டில் அந்­நி­யப்­பட்டுப் போகும் நிலையே காணப்­ப­டு­கின்­றது எனக் குறிப்பிட்டர்ர. அதே போன்று ஆசிய வல­யத்தில் இந்­தியா பெரிய நாடாகும் அத்­துடன் இலங்­கையின் அயல் நாடாகும். ஆனால் தமி­ழ­கத்தின் பாரா­தூ­ர­மான செயற்­பா­டுகள் இலங்கை இந்­திய நட்பை பாதிக்கும் வகை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன.மறுபுறம் சீனா இலங்கையில் பரந்து செயற்படுவதனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் சில தவறான கருத்துக்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இலங்கை சீன உறவு ஏனைய நாடுகளை பாதிக்காது என்பதை உறுதிப்பட கூறிக் கொள்ள விரும்புகின்றோம் எனக் குறிப்பிட்டர்ர.அதே போன்று தேசிய பாதுகாப்பிற்கும் வலயப் பாதுகாப்பிற்கும் சவாலாக காணப்படும் ஆயுதம், போதைப் பொருள் மற்றும் ஆள் கடத்தல்கள் எல்லை பயங்கரவாத செயற்பாடுகளையும் புதிய சவால்களை இனங்கண்டு இலங்கை செயற் படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சவாலானது – கோதபாய ராஜபக்ஷ நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சவாலான விடயம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் மிக நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த காரணத்தினால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சுலபமான விடயமல்ல என அவா சுட்டிக்காட்யுள்ளார்.நல்லிணக்க முனைப்புக்கள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், முழுப் பலனையும் விரைவில் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.வடக்கில் அனைத்து கட்சிகளும் சுதந்திரமான முறையில் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் பாரிய சவால்களை அரசாங்கம் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.சிங்கள கடும்போக்குவாதிகள் தலைதூக்கியுள்ளனர் – கோதபாய ராஜபக்ஷ சிங்கள கடும்போக்குவாதிகள் தலைதூக்கியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சிங்கள மற்றும் முஸ்லிம் கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிங்கள கடும்போக்குவாதிகள் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பாரிய சவாலை அரசாங்கம் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில வெளிநாட்டுச் சக்திகள் இலங்கை முஸ்லிம்களை தனிமைப்படுத்த சமூகத்திலிருந்து விலக்குவதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் இலங்கை சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுவதனை தடுக்கும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி நாட்டுக்கு எதிராக பிச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஜனநாயக சுதந்திரத்தை மக்களும் அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். - See more at: http://www.newsjvp.com/srilanka/46522.html#sthash.0nvd91GP.dpuf

Geen opmerkingen:

Een reactie posten