உள்ளுக்குள்ளே பல எதிரிகளை வைத்திருந்துள்ளார் போலும்!எப்பொழுதும் மறைந்தே வாழ்ந்ததன் அர்த்தம் அதுதானா??
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், பாவித்த வாகனங்கள் ஒன்றின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். புலிகள் தமது தலைமைக்கு எவ்வாறான பாதுகாப்பை வழங்கியிருந்தார்கள் என்பதனை இப் புகைப்படத்தில் பார்த்தல் தெரிந்துவிடும். உலகில் உள்ள முன்னணித் தலைவர்கள் எல்லோரும் குண்டு துளைக்காத கார்களையும் கண்ணிவெடி வெடித்தால் அதில் இருந்து தப்ப கூடிய கார்களையும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அப்படியான கார்களை இலங்கைக்குள் கொண்டு வருவது புலிகளுக்கு சற்று கடினமா காரியம். அதனால் அவர்கள் அதுபோன்ற பாதுகாப்பான வாகனத்தை உள்ளூரிலேயே தயாரித்துள்ளார்கள்.படத்தில் நீங்கள் பார்க்கும் வேனில் உள்ளே(பின் புறத்தில்) இருப்புக் கவசத்தால் ஆன பெட்டி ஒருன்று இருக்கிறது. அதற்குள் 3 கதிரைகள் இருக்கிறது. அதனை வெளியே இருந்தும் உள்ளே இருந்தும் மூட முடியும். கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க இந்த வாகனம மிகவும் நேர்த்தியாகவும், சீராகவும் புலிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten