[ வீரகேசரி ]
அதேவேளை, நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் நிலைமை மற்றும் அவர்களது குழந்தைகள் நோர்வே காப்பகங்களால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்களை தெளிவுபடுத்திய நான்கு ஆவணக்கோவைகள் அவரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வே நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக்ஜோசப் டிலாந்தினிஜோசப் தம்பதியரின் மூன்று குழந்தைகளான எரிக்ஜோசப் இனுக்கா (வயது 14), எரிக்ஜோசப் மெலோனி (வயது 10), எரிக்ஜோசப் மெரியோ (வயது 7) ஆகியோரும் தாமோதரம் பிள்ளை ஆனந்தராசா ரஜித்தா ஆனந்தராசா ஆகிய தம்பதியரின் குழந்தைகளான ஆனந்தராசா தமிழினி (வயது 14), ஆனந்தராசா ஈழவன் (வயது 12), ஆனந்தராசா யாழினி (வயது 9), ஆனந்தராசா தமிழ்ப்பிரியன் (வயது 7) ஆகியோரும் மகாத்மாஜோதி செல்லத்துரை சித்ராதேவி செல்லத்துரை தம்பதியரின் மூன்று குழந்தைகளான மகாத்மாஜோதி நபீலா (வயது 7), மகாத்மாஜோதி நிலோத் (வயது 5), மகாத்மாஜோதி நிமித்தா (வயது 4) ஆகி@யாரும் வசந்தகுமாரன் சியாமலா வசந்தகுமாரன் தம்பதியரின் குழந்தைகளான வசந்தகுமாரன் ஷியாந்தன் (வயது 12), வசந்தகுமாரன் ஷண்ட்ஷியா (வயது 9) ஆகியோருமாக மொத்தமாக 12 குழந்தைகள் நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகங்களில் பலவந்தமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைத்திருப்பதாக முழுத் தகவல்களும் உள்ளடக்கிய ஆவணக்கோவையே கடந்த வெள்ளிக்கிழமை நவநீதம்பிள்ளையிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நோர்வே வாழ் பாதிக்கப்பட்ட பெற்றோரின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உறவினரான ஜேசு அமிர்தநாதன் என்பவரூடாகவே மேற்படி நான்கு குடும்பங்களின் முறைப்பாடுகளுடனான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமக்கும் தமது குழந்தைகளுக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதி, அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுவர் உரிமைமீறல்கள் சர்வதேச சட்டம் ஆகியவை மீறப்பட்டிருக்கின்றமையை சுட்டிக்காட்டும் வகையிலான ஆவணங்கள் மற்றும் தாம் நோர்வே அரசாங்கத்ததாலும் நோர்வே சிறுவர் காப்பகங்களாலும் நோர்வே நீதிமன்றங்களாலும் நோர்வே பொலிஸாராலும் இரண்டு வருட காலமாக ஏமாற்றப்பட்டிருப்பதையும் மேற்படி பாதிக்கப்பட்ட பெற்றோர் தமது ஆவணங்களுடாக நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் ஆவணக் கோவைகளை பெற்றுக்கொண்ட நவநீதம்பிள்ளை இவ்விடயம் தொடர்பில் தாம் ஊடகங்களுடாக அறிந்திருப்பதாக தெரிவித்ததுடன் நோர்வே சிறுவர் விவகாரம் தொடர்பில் உரியமுறையில் கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதி வழங்கியுள்ளார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWmv3.html#sthash.SspXjG4U.dpufநோர்வே நாட்டில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எரிக்ஜோசப் டிலாந்தினிஜோசப் தம்பதியரின் மூன்று குழந்தைகளான எரிக்ஜோசப் இனுக்கா (வயது 14), எரிக்ஜோசப் மெலோனி (வயது 10), எரிக்ஜோசப் மெரியோ (வயது 7) ஆகியோரும் தாமோதரம் பிள்ளை ஆனந்தராசா ரஜித்தா ஆனந்தராசா ஆகிய தம்பதியரின் குழந்தைகளான ஆனந்தராசா தமிழினி (வயது 14), ஆனந்தராசா ஈழவன் (வயது 12), ஆனந்தராசா யாழினி (வயது 9), ஆனந்தராசா தமிழ்ப்பிரியன் (வயது 7) ஆகியோரும் மகாத்மாஜோதி செல்லத்துரை சித்ராதேவி செல்லத்துரை தம்பதியரின் மூன்று குழந்தைகளான மகாத்மாஜோதி நபீலா (வயது 7), மகாத்மாஜோதி நிலோத் (வயது 5), மகாத்மாஜோதி நிமித்தா (வயது 4) ஆகி@யாரும் வசந்தகுமாரன் சியாமலா வசந்தகுமாரன் தம்பதியரின் குழந்தைகளான வசந்தகுமாரன் ஷியாந்தன் (வயது 12), வசந்தகுமாரன் ஷண்ட்ஷியா (வயது 9) ஆகியோருமாக மொத்தமாக 12 குழந்தைகள் நோர்வேயிலுள்ள சிறுவர் காப்பகங்களில் பலவந்தமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைத்திருப்பதாக முழுத் தகவல்களும் உள்ளடக்கிய ஆவணக்கோவையே கடந்த வெள்ளிக்கிழமை நவநீதம்பிள்ளையிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நோர்வே வாழ் பாதிக்கப்பட்ட பெற்றோரின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உறவினரான ஜேசு அமிர்தநாதன் என்பவரூடாகவே மேற்படி நான்கு குடும்பங்களின் முறைப்பாடுகளுடனான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமக்கும் தமது குழந்தைகளுக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதி, அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுவர் உரிமைமீறல்கள் சர்வதேச சட்டம் ஆகியவை மீறப்பட்டிருக்கின்றமையை சுட்டிக்காட்டும் வகையிலான ஆவணங்கள் மற்றும் தாம் நோர்வே அரசாங்கத்ததாலும் நோர்வே சிறுவர் காப்பகங்களாலும் நோர்வே நீதிமன்றங்களாலும் நோர்வே பொலிஸாராலும் இரண்டு வருட காலமாக ஏமாற்றப்பட்டிருப்பதையும் மேற்படி பாதிக்கப்பட்ட பெற்றோர் தமது ஆவணங்களுடாக நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் ஆவணக் கோவைகளை பெற்றுக்கொண்ட நவநீதம்பிள்ளை இவ்விடயம் தொடர்பில் தாம் ஊடகங்களுடாக அறிந்திருப்பதாக தெரிவித்ததுடன் நோர்வே சிறுவர் விவகாரம் தொடர்பில் உரியமுறையில் கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதி வழங்கியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten