ஹவ் பஃன் அன் சேவ் "Have Fun and Stay Safe" என்ற ஒரு குறும்படத்தை, பிரித்தானிய அரசின் வெளியுறவுத்துறை நேற்று முந்தினம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு தனியாக சுற்றுலாவுக்கு செல்லும் பெண்களை அது மிகவும் எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற வீடியோக்களை பிரித்தானிய வெளியுறவு அமைச்சு முன்னர் தயாரித்துள்ளது. ஆனால் அன் நாடுகள் மிக மிக குறைவு என்று தான் கூறவேண்டும். இலங்கையில் இரவில் தனியாகச் செல்லவேண்டாம் ! களியாட்ட விடுதிகளில் சென்று தண்ணியடிக்க வேண்டாம் ! ஆட்டோவில் தனியாகப் போகவேண்டாம் ! பலரைக் கவர்ந்து இழுக்கும் உடைகளை(ஆபாச உடைகளை) அணியவேண்டாம் ! இப்படி பல கட்டுப்பாடுகளை இதில் சொல்லியுள்ளார்கள். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால்..... பிரித்தானியப் பெண்கள் விடுமுறைக்குச் செல்வதே நிம்மதியாகச் சென்று தண்ணியடிக்க தான்... அதுமட்டுமல்லாது கடற்கரையில் அரை குறை உடுப்புகளோடு நீந்த தான். இது அவர்களின் அடிப்பை தேவை.... ஆனால் அதனைக் கூட இலங்கையில் செய்யவேண்டாம் என்றால் எப்படி முடியும் ?
மேற்குறிப்பிட்ட அனைத்து விடையங்களையும் வைத்துப் பார்க்கும்போது, தென்னிலங்கையில் காடையர்கள் பலர், பெண்களை கடத்தி கற்பழிப்பவர் பலர், புருசனை அல்லது காதலனை சுட்டு கொன்றுவிட்டு பெண்ணை கற்பழிப்பவர்கள் நிறையப்பேர் உள்ளார்கள் என்பதனை மிகவும் நாசூக்காக மற்றும் ரெம்பவும் நாகரீகமாகச் சொல்லி இருக்கிறார்கள் என்றால் பாருங்களே. ஒட்டுமொத்தத்தில் இந்த வீடியோவைப் பார்க்கும் எந்த ஒரு இளம்பெண்னும் இலங்கை செல்லமாட்டார் போல இருக்கே...
"போங்கள் ஆனால் கவனமாக இருங்கள்" என்ற தலைப்பில் இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவை இலங்கையில் உள்ள உல்லாசத்துறை அமைச்சர் இன்னும் பார்க்கவில்லைப் போல் இருக்கிறது. பார்த்திருந்தால் பல சூடான அறிக்கைகள் இன் நேரத்திற்கு வெளியாகி இருக்கும். அது இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்.... ஆனால் அதற்கு முன்னர் அந்த வீடியோவையும் இப்போது பாருங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten