தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 september 2013

நவி.பிள்ளையின் இலங்கை விஜயம்!

ஐ.நா மனித உரிமை காப்பகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கை வருகை மிக தாமதமாக இருந்தாலும் கூட எதோ ஒரு வகையில் ஒரு தாக்கத்தை கொடுத்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
யுத்த அனர்த்தம் முடிந்த பின்னர் முதன்முதலாக ஐ.நா வின் நேர்மையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற போக்கில் ஒரு மாய வருகையை பான் கீ மூன் செய்ததையும் இக்கணத்தில் நினைவுபடுத்தல் அவசியமாகின்றது.
இருவரின் வருகையிலும் மாறுபட்ட அனுமானங்கள் தென்பட்டதை அவரவர்களின் பின்னூட்டல்களில் இருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது.
பான் கீ மூனின் வருகை சிங்களத்தின் இரண்டாவது இராஜகுமாரனாகிய கோத்தபாயவை மகிழ்விப்பதாக இருந்தது. அனர்த்தம் பற்றிய எந்தவித அறிக்கையும் அவரினால் வெளியிடப்படவில்லை.
யுத்தம் ஒன்று நடைபெறுகையில் இப்பேர்ப்பட்ட அனர்த்தங்கள் நிகழ்வது சகஜம் என்று துதி பாடிவிட்டு ஐ. நாவிற்குரிய கடமைகளையும் தனக்குரிய கடமைகளையும் கிடப்பில் போட்டு மறைத்துவிட்டார்.
பான் கீ மூன் விஜயம் செய்ததற்குப் பதிலாக நவிப்பிள்ளை வந்திருப்பாராயின் தமிழ் மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெற வாய்ப்பிருந்திருக்கும்.
மேலும் ஒரு விடயம் யாதெனில், யுத்தத்தின் பின்னரான சிங்களத்தின் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஒருவேளை நிறுத்தப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய பெறுமதியான காரியம் கைநழுவிப் போய்விட்டதே என அம்மையாரின் விஜயத்தையிட்டு அங்கலாய்ப்பவர்கள் இப்போதும் உள்ளார்கள்.
காலம் கடந்துவிட்ட ஒரு ஞானம் தான். கறந்த பால் முலை ஏறாது என்பதை நவிப்பிள்ளை இப்போதாவது உணர்ந்திருப்பாறென்று நம்பலாம்.
நவிப்பிள்ளையின் வருகையால் பெரும்பான்மை சிங்களம் சீற்றம் கொண்டுள்ளதென்பது மறுக்க முடியாது. இதன் காரணமென்ன? இது சொல்லும் செய்தி என்ன?
ஒட்டுமொத்தமாக சர்வதேசத்தின் அங்கீகாரத்தோடு, தமிழினம் இலங்கையில் இருந்து அழிக்கப்படவேண்டும் என்பதே சிங்களம் கூறும் செய்தியாகும். அதாவது காரணம் ஏதும் இல்லாமல் கூட அதர்ம வழியில் அழிக்கப்பட்டாலும் எவருக்குமே தலையிட உரிமை இல்லை என்பதே சிங்களத்தின் நினைப்பு.
இவைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் குப்பாடிச் சிங்கள அமைச்சர் மேர்வின் சில்வாவை காணலாம். நவிப்பிள்ளையின் வருகை எதற்காகவோ இருக்க குப்பாடி அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மகிந்தா கொடுத்த சுதந்திர வேட்கை, நவிப்பிள்ளையை திருமணம் செய்வதில் போய் நிற்கிறது.

மேர்வின் சில்வாவின் (சு)தந்திரத்தை உராய்வதற்கு இடமில்லாவிடின் எங்கேயாவது சிங்களச்சேரிகளில் உராய்ந்து பார்க்கலாம். ஒருபுறம், சிங்களத்தை தலைகுனிய வைத்து நவிப்பிள்ளையிடம் இலங்கை அரசை மண்டியிட்டு மன்னிப்பு கோர வைத்த மேர்வின் சில்வாவிற்கு நன்றி.
நவிப்பிள்ளையின் இலங்கை விஜயம் சுதந்திரமாக அமைந்திருந்தது. குறிப்பாக வடக்குப் பகுதிகளில் முழுவதுமாக சுற்றுலா செய்து நிலைமைகளை நேரில் கண்டறிந்தார். அதேபோல் கிழக்கின் கேந்திர ஸ்தானமான திருக்கோணமலையின் சம்பூர்ப் பகுதிகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கியிருந்த கிளிவெட்டி அகதி முகாமுக்குள் கால்நடையாகவே சென்று நிலைமைகளை நேரில் அவதானித்தார்.
இந்த நிலைமைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைக்காமல் இருந்தது புலிச்சாயம் பூசுவதற்கு காத்துக்கொண்டிருந்தவர்களை ஏமாற வைத்து விட்டது.
நேரடி அவதானிப்பிலிருந்து நவிப்பிள்ளை ஏராளமான பாடங்களை கற்றுக்கொண்டிருப்பார். அம்மையாருக்கு புதிதாக சொல்ல வேண்டிய விடயங்கள் எதுவுமே இருக்காது.
"தமிழின அழிப்பு" என்ற அச்சில் இருந்து அம்மையார் சுழல வேண்டுமென தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். போக்குற்றங்களுக்கப்பால் இன அழிப்பை முதன்மைப்படுத்த வேண்டும்.
இதுவே அம்மையாரின் பிரதான கடமையாகப்படுகின்றது. இதற்கான கட்டமைப்பை அம்மையார் ஏற்படுத்தி ஒரு சுயாதீனமான குழு ஒன்றிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தமிழின அழிப்பை மையப்படுத்தி மறைந்து கிடக்கும் ஆதாரங்களையும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு அனர்த்தங்களுக்கான ஆதாரங்களையும் ஒழுங்குபடுத்தி தமிழீழ மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சாட்சிகளுடன் அம்மையாரின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தசக்கிரீவன்
tmnadesan@gmx.ch
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTYMWkqz.html#sthash.O2d5cKXg.dpuf

Geen opmerkingen:

Een reactie posten