தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 september 2013

நவிபிள்ளையின் கருத்தினாலேயே சுவிஸ் இலங்கைத் தமிழர்கள் குறித்த தனது முடிவை மாற்றியது! திவயின


இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஐ. நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்த கருத்துகள் காரணமாகவே சுவிற்சலாந்து அரசு அங்குள்ள இலங்கை தமிழர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலத்தில் இலங்கையிலிருந்து சுவிஸ் சென்றிருந்த 3000 தமிழர்களில் 1800 தமிழர்களுக்கு அந்த நாட்டில் வசிப்பதற்கான தற்காலிக விஸாவை அந்நாடு வழங்கியிருந்த நிலையில், விஸா மறுக்கப்பட்ட 1200 பேரையும் நாடு கடத்தத் திட்டதிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துகளினால் நாடு கடத்தும் திட்டத்தை சுவிஸ் அரசு கைவிட்டுள்ளது என்றும் திவயின தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten