தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 september 2013

புலிகள் பொலிஸ் நிலையத்துக்கு உள்ளேயே புகுந்து விளையாடியுள்ளார்கள் !



கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 120 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். இது நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்பட்ட வாகனம், என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 1995ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட மேற்படி லொறி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் இதுவரை காலமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது குறிப்பிட்ட இந்த லெறியில் அடிப் பகுதியில் 20KG நிறையுடைய , பெட்டிகளில் இந்த வெடிமருந்து மறைத்துவைக்கப்பட்டுள்ளது. 

இந்த லொறியை 1995 ம் ஆண்டு பொலிசார் மடக்கிப் பிடித்தவேளை, பல சோதனைகளை மேற்கொண்டுவிட்டுத்தான் அதனை பொலிஸ் நிலைய வளாகத்தில் நிறுத்திவைத்தார்கள். ஆனால் தன் பின்னர் , புலிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த வாகனத்தினுள் வெடிமருந்துகளை மறைத்து வைத்திருந்திருக்கிறார்கள். இலங்கை புலனாய்வுத்துறையும், இராணுவமும் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்திக்கொண்டு இருக்க, புலிகள் பொலிஸ் நிலையத்திலேயே தமது பொருட்களை பாதுகாப்பாக பதுக்கிவைத்துள்ளார்கள். என்ன ஒரு புத்திசாலித்தனம். அவ்வப்போது தேவைகளுக்கு அவர்கள் அதில் உள்ள ஒரு பெட்டியை அல்லது 2 பெட்டியை பாவித்து உள்ளார்கள். இதனை வெளியே எடுத்துக்கொண்டு வந்தது தந்ததும் ஒரு சிங்களப் பொலிஸ்காரராகத் தான் இருக்கவேண்டும்.

இந்த அதிர்சி சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்படி எதனையும் தெரிவிக்க மறுக்கிறார்கள். தாம் 1995ம் ஆண்டு இந்த லொறியை கைப்பற்றியவேளையே அதில் 120 KG வெடிபொருட்கள் இருந்திருக்கலாம் என்று புலுடா விடுகிறார்கள். அது சாத்தியம் இல்லை என்பது அனைவரும் அறிந்தவிடையம். லொறியை சல்லடை போட்டு தெடாமலா, பொலிஸ் நிலையம் கொண்டு சென்றார்கள் ? எது எவ்வாறாயினும் பொலிசார் , இன்னும் அதிர்சியில் இருந்து மீளவில்லையாம். ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தால் அது வெடித்திருந்தால் ? இன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் அல்லவா ?


Geen opmerkingen:

Een reactie posten