தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 september 2013

பிரித்தானியா கவுன்சிலுக்குள் பறக்கும் புலிக்கொடி ! தமிழர் பயங்கரவாதிகள் என்பதனை மறைமுகமாக குறித்துள்ளார்களோ!!



பிரித்தானிய லூசிஹம் பகுதியில் உள்ள கவுன்சிலில் தமிழ் மொழிக்கு புலிக்கொடியை அடையாளமாகப் போட்டு உள்ளார்கள். அதாவது தமிழர்கள் என்பதற்கு அடையாளம் என்னவென்று கேட்டால் அது எனது தேசியகொடியான புலிக்கொடி தான் என்பது வெள்ளைக்காரர்களுக்கு நன்றாக விளங்கியுள்ளது. வீடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஒரு தமிழ் குடும்பம் இக் கவுன்சிலுக்குச் சென்றுள்ளது. அங்கிருந்த அதிகாரி ஒருவர் குறித்த வீடு தொடர்பான வீடியோ ஒன்று தம்மிடம் உள்ளதாகவும், எந்த மொழியில் அதனை பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட வீடியோ ஆரம்பமாக முன்னர், எந்த மொழியில் அதனை பார்க்கவேண்டும் என்று தேர்ந்து எடுக்கும் திரையில் தமிழ் மொழியும் இருந்தது. அதில் தமிழுக்கு பக்கமாக அதன் கொடியாக புலிக்கொடி இருக்கிறது.

அதனைப் பார்த்த அத் தமிழ் குடும்பம் , மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளார்கள். இதனைப் பார்க்கும்போது எமக்கு மகிழ்சியாக உள்ளது. நான் ஒரு போட்டோ எடுக்கவா என்று அவர் கேட்டு, போட்டோ எடுத்துள்ளார். பிரெஞ்சு, சொமாலியா, சீனமொழு, துருக்கி என்று பல நாட்டு மொழிகளுக்கு மத்தியில், தமிழ் காணப்படுவது, அதற்கு புலிக்கொடியை சின்னமாகப் போட்டதும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம் ஆகும். பிரித்தானியா மற்றும் வேறு நாடுகளில் உள்ள சிலர் போராட்டம் நடக்கும்வேளை புலிக்கொடிகளை கொண்டுவரவேண்டாம், அதனை பொலிசார் பார்த்தால் ஆகாது என்று சொல்லுவார்கள். ஆனால் சொல்லப்போனால் அனைத்து இன மக்கள் புலிக்கொடியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தற்போது தோன்றுகிறது. 

குறித்த கவுன்சிலுக்கு எமது நன்றிகளை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இது தொடர்பாக இரு சுவாரசியமான தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், பிரித்தானிய உள்துறை அதிகாரிகள் சிலர் பிரித்தானிய தமிழர் பேரவையினரை(BTF) தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்கள். எல்லா நாட்டு மொழிகளுக்கும் அன் நாட்டின் கொடிகளை பாவிக்கிறோம். ஆனால் பல நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழிக்கு என்ன நாட்டுக் கொடியைப் போடுவது என்று கேட்டுள்ளார்கள். இதனையடுத்து வரலாற்று ஆவணங்கள் சிலவற்றை தாயார் படுத்திய பிரித்தானிய தமிழர் பேரவையினர், புலிக்கொடியே தமிழர்களின் தேசிய கொடி என்பதனை அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளார்கள். பல ஆவணங்களையும் சான்றுகளையும் பார்வையிட்ட அவர்கள், இறுதில் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதன் காரணாமவே பிரித்தானியாவில் உள்ள அரச திணைக்களங்களில், தமிழ் மொழிக்கு பக்கத்தில், இனி புலிக்கொடி வரும் நிலை தோன்றியுள்ளது. இதற்கு காரணமான பிரித்தானிய தமிழர் பேரவையினரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

அமெரிக்க தூதுவர் முல்லைத்தீவு சந்தையில் காய் கறிகளை பார்வையிட்டார் !
06 September, 2013 by admin


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷெல் ஜெ.சிஸன் நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் என அதிர்வு இணையம் அறிகிறது. ஆழிப்பேரலையால் சேதமடைந்த முல்லைத்தீவு பொதுச் சந்தை 4,16,000 அமெரிக்க டொலர்கள் ( ஏறத்தாழ 54 மில்லியன் இலங்கை ரூபா) செலவில் அமெரிக்காவால் புணரமைக்கப்பட்டு இருந்தது. முதலில் இதனை அமெரிக்க தூதுவர் திறந்துவைத்தார். 

ஆத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கக்பட்ட சிறுவர்களின் உளவுரணை, மேம்படுத்தும் நோக்கில் 86,000 அமெரிக்க டொலர்கள் ( 11.5மில்லியன் இலங்கை ரூபா) செலவில் நிர்மானிக்ககப்பட்ட பூங்காவினையும் அவர் திறந்துவைத்தார். ஆமெரிக்க துர்துவரின் இந்த விஜயத்தின் போது யுஎஸ்எயிட் பணிப்பாளர் ஷெரி கார்லினும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten