தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 september 2013

வடக்கில் நவிப்பிள்ளையின் வருகையை முன்னிட்டு மூடப்பட்ட காவலரண்கள் மீண்டும் அதே இடங்களில்..

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு அகற்றப்பட்ட காவலரண்கள் மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டுள்ளமையானது அரசு சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றிய கபட நாடகமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ் தேசியக்  கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த 26ம் திகதி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்தார்.
இவர் வருகையை முன்னிட்டு ஆணையிறவு மற்றும் யாழ். குடாநாட்டிலிருந்த இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்டதுடன், இராணுவத்தினரின் ரோந்து சேவையும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
வீதிகளிலும் இராணுவத்தினரைக் காண முடியாது அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நவநீதம்பிள்ளை யாழ். முல்லைத்தீவு விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும் காவலரண்களும் இராணுவ ரோந்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
இராணுவத்தினர் மீண்டும் வீதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அரசின் இத்தகைய செயற்பாடானது சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றிய கபட நாடகமாகவே நாம் கருதுகிறோம்.
சர்வதேசத்தின் முன்னால் அரசு உண்மையை மூடிமறைப்பதையே இது தெளிவாக உணர்த்துகிறது என்றும் அவர் சொன்னார்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWms5.html#sthash.fvvKWYIV.dpuf

Geen opmerkingen:

Een reactie posten