தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 februari 2018

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குறித்து இராணுவத் தளபதியின் நிலைப்பாடு!


காணொளி ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பதவியிலிருந்து நீக்க முடியாது என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 70வது சுதந்திரத் தினம் அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில் அதனை புறக்கணித்து கடந்த நான்காம் திகதி லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சைகை மூலம் அச்சுறுத்தும் காணொளி ஒன்றுசமூக வலைத்தளங்களிலும், இணைய ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.ஷ
இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்துமாறு வெளிவிவகார உத்தரவிட்டிருந்தது.
எனினும், இந்த உத்தரவினை இரத்து செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்வதற்கு இன்று அறிவிப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மாற்று கொள்கைகளுக்கான ஆய்வு நிலையம் என்பன கண்டனம் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, “காணொளி ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளை பதவி நீக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தூதரகம் என்பன விசாரணைகளை நடத்தும்.
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கேணலாக இருந்த போது, மனிதாபிமானப் போர் நடவடிக்கையில் 11 ஆவது கெமுனு காவல்படையின் கட்டளை அதிகாரியாக, முல்லைத்தீவின் பல கிராமங்களை மீட்டு, மகத்தான சேவை ஆற்றியுள்ளார்.” என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/173533?ref=recommended2

Geen opmerkingen:

Een reactie posten