வெளிவிவகார அமைச்சால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்ணான்டோவை மீண்டும் பணியில் இணைந்துக்கொள்ள அனுமதியளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவை பதவியில் தொடர அனுமதித்திருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு வெளிவிவகார அமைச்சு எடுத்த முடிவானது சரியானது எனக் குறிப்பிடும் கூட்டமைப்பின் பேச்சாளர் பணி இடைநிறுத்தத்தின் பின்னரே விசாரணை இடம்பெற வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/srilanka/01/173523?ref=imp-news
Geen opmerkingen:
Een reactie posten