தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 februari 2018

>உலகை உலுக்கிய அந்த இரண்டு புகைப்படங்கள்!


சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை உலகுக்கு காட்டியது இதயத்தை உலுக்கும் இரண்டு புகைப்படங்கள் தான்.
கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து, சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் நடக்கும் இந்த சண்டையில், மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த போர் கொடூரத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியது இந்த இரண்டு படங்கள் தான்.
சிரியாவில் இருந்து துருக்கி நாட்டிற்கு ஏராளமான அகதிகள் படகின் மூலமாக பயணம் செய்த போது, எதிர்பாராத விதமாக அந்த படகு கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில், அய்லான் குர்தி எனும் 3 வயது சிறுவனின் உடல், துருக்கியின் கடற்கரையில் ஒதுங்கியது.

Reuters

அவனது முகம் மண்ணில் புதைந்த நிலையில் இருந்தவாறு, ஊடகவியலாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார். ஊடகங்களில் வெளியான இந்த புகைப்படம், உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனதை உலுக்கியது.
தொடர்ந்து அச்சிறுவனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இதேபோல், அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக, ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கு வசித்து வந்த பலர் உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ஆம்புலன்ஸில் முகத்தில் ரத்தக் காயங்களுடன் அமர்ந்திருந்த சிறுவனின் புகைப்படம், உலகத்தின் மனசாட்சியை உரசிப் பார்த்தது.

AFP/Aleppo Media Center

http://news.lankasri.com/middleeastcountries/03/172805?ref=ls_d_world

Geen opmerkingen:

Een reactie posten