தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 februari 2018

இராணுவ அதிகாரிக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!


லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுக்கப் போவதாக சைகை மூலம் மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரியால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிக்கு பல்வேறு மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு செயலாளர் Boris Johnsonக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் செயற்பாடு குறித்து தாம் கடுமையான வருத்தத்தை வெளியிடுவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் 70வது சுதந்திர தினமான கடந்த 4ம் திகதி, தமிழர்கள் சிலர் மிகவும் அமைதியான முறையில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமது காணியை மீட்டு கொள்வது தொடர்பான ஆர்ப்பாட்டம் ஒன்றே முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது குறித்த இராணுவ அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி தனது கழுத்தில் விரலை வைத்து சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பிரித்தானியாவில் செயற்படும் உத்தியோகபூர்வ அதிகாரி ஒருவரின் பொருத்தமற்ற, அச்சுறுத்தும் செய்பாட்டாகும்.
இதற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் தாம் எதிர்ப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/uk/01/173469?ref=recommended1

https://twitter.com/Charles_Nicolas/status/961028012580814848/photo/1?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.tamilwin.com%2Fuk%2F01%2F173469

இக்கட்டளை மைத்திரியால் மீள எடுக்கப்பட்டு மீண்டும் பதவியில்....




Geen opmerkingen:

Een reactie posten