பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 70வது சுதந்திரத் தினம் அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில் அதனை புறக்கணித்து கடந்த நான்காம் திகதி லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ சைகை மூலம் அச்சுறுத்தும் காணொளி ஒன்றுசமூக வலைத்தளங்களிலும், இணைய ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
இந்த விவகாரம் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ், இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரிகேடியர் பிரியங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் இராஜதந்திர பதவிகளை வகிக்கவோ அல்லது பிரித்தானியாவில் தங்கியிருக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/politics/01/173549
Geen opmerkingen:
Een reactie posten