தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 februari 2018

லண்டனிலுள்ள பிரிகேடியர் விடயத்தில் மைத்திரியின் செயற்பாட்டால் பலர் பேரதிர்ச்சியில்!


இலங்கை சுதந்திரத்தினத்தின் போது லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை, தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விடுத்திருந்தார்.
இன் நிலையில் கொடூர அச்சுறுத்தல் விடுத்த லண்டனிலுள்ள இலங்கைத்தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை வெளிவிவகார அமைச்சு பணி நீக்கம் செய்திருந்தது, இன் நிலையில் மீண்டும் பணியாற்ற அனுமதித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு, பேரதிர்ச்சியாக அமைந்துள்ளதென மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
பிரிகேடியர் பிரியங்க லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பணியை மீளப் பொறுப்பேற்பதற்கான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இன்று உறுதிப் படுத்தினார்.
படைவீரர்கள் என்பவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படக் கடமைப்பட்டுள்ளவர்கள். அந்தவகையில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்தை அறுப்பதைப் போன்ற சைகையை வெளிப்படுத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்தமைக்காக, உடனடியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

http://www.tamilwin.com/srilanka/01/173498?ref=home-top-trending

Geen opmerkingen:

Een reactie posten