தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான 46 வயதுடைய சாந்தரூபன் தங்கலிங்கம் நாளை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார்.
2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய சாந்தரூபனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் தற்போது குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
சாந்தரூபனை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது, அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஐ.நா அகதிகள் ஆணையம் அவுஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா, சாந்தரூபனை வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 19 வயதில் இணைந்த சாந்தரூபன், இனியவன் என்ற பெயரில் இயங்கியவர் என்றும் இவர் புலிகள் இயக்கத்தின் முன்னணி பங்கு வகித்து வந்தவர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், தாம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் கூட வாய்ப்புகள் உள்ளதாக, சாந்தரூபன் அச்சம் வெளியிட்டிருந்தார்.
எனினும், சாந்தரூபன் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம்பெயர் தமிழர்கள் உள்ளடங்களாக பலர் அண்மையில், மெல்பேர்ன் புறநகர்ப் பகுதியான Dandenongஇல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதில், சாந்தரூபனுடன் பிற தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/community/01/174891?ref=ls_d_tamilwin
Geen opmerkingen:
Een reactie posten