தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 februari 2018

அகதிகளை குடியமர்த்த புதிய கட்டுப்பாடு விதிக்கும் பிரான்ஸ்!


பிரான்ஸில் அகதிகளை குடியமர்த்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் Gerard Collomb தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் குடிபுகும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அகதிகளின் குடியேற்றத்திற்காக புதிய கட்டுப்பாடுகளை அந்நாடு விதிக்க உள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerard Collomb கூறுகையில், கடந்த ஆண்டில் மட்டும் 1,00,000 பேர் பிரான்ஸில் வாழ்விடத்திற்காக அனுமதி கோரியுள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 7 சதவிதம் அதிகமாகும்.
கடந்த 2012ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் இது இரண்டு சதவிதத்தில் அதிகரித்து வந்துள்ளது. அனைத்து அகதிகளுக்கும் இனிமேல் வாழ்விடங்கள் வழங்க முடியாது.
எனவே அகதிகளில், அரசியல் காரணமாக அகதிகளானவர்களைத் தவிர்த்து, வறுமை காரணமாக அகதியானவர்களை மட்டுமே குடியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாழ்விட கோரிக்கையாளர்கள் மற்றும் பொருளாதார அகதிகளுக்கிடையே, யாரை குடியமர்த்த வேண்டும் என்பதில் மிகுந்த கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


http://news.lankasri.com/france/03/171883?ref=ls_d_france

Geen opmerkingen:

Een reactie posten