தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 februari 2018

பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் வட கொரிய கலைக்குழு??!


வடகொரிய கலைகுழு உறுப்பினர்களை அங்குள்ள உயர் பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய ராணுவத்தில் இசைக்கலைஞராக செயல்பட்டவர் Lee So yeon. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு தப்பினார். இவர் வடகொரிய கலைக்குழு தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார்.
வடகொரிய கலைக்குழுவினரை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்களின் உள்ளக்குமுறுமல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும், விரும்பியவர்களுக்கு பாலியல் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

வடகொரிய கலைக்குழுவினர் பெரும்பாலும் ஆளும் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள நிர்பந்திக்கப்படுவார்கள்.
அங்கே அரசியல்வாதிகளுக்கு பாலியல் சேவை செய்வதே இவர்களுக்கு இடப்படும் கட்டளை.
Army of Beauties எனப்படும் வடகொரியாவின் கலைக்குழுவில் மொத்தம் 229 இளம்பெண்கள் செயல்படுகின்றனர். இவர்களே தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் போது உலக ஊடகங்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்தவர்கள். தென் கொரியாவில் நடந்த கலை நிகழ்ச்சியின்போது இவர்கள் முகமூடி அணிந்து நடத்திய நிகழ்ச்சியானது பலராலும் பாராட்டப்பட்டது.



http://news.lankasri.com/othercountries/03/172825?ref=ls_d_world

Geen opmerkingen:

Een reactie posten