காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை விடுவித்து தருமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று ஒரு வருடத்தை கடந்துள்ளது.
இதை முன்னிட்டே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூ கஅமைப்புகள்,அரசியல் கட்சிகள் மதகுருமார்கள், தென்னிலங்கை அமைப்புக்கள் என பலர்கலந்துகொண்டு இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/community/01/174821?ref=recommended3
Geen opmerkingen:
Een reactie posten