பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பிலான விவகாரம் தற்போது மற்றுமொரு பரிணாமத்தை அடைந்துள்ளது.
இலங்கையின் 70வது சுதந்திரத் தினம் கடந்த நான்காம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில் அதனை புறக்கணித்து லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் அச்சுறுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களிலும், இணைய ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பிலான தற்போதைய நிலை குறித்து பிரித்தானியாவில் வசித்து வரும் மனித உரிமைகள் ஆர்வலரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கணநாதன் அவர்கள் லங்காசிறிக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten