ஆயுதம் எதுவும் இன்றி நிராயுதபாணியான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கழுத்து அறுத்து கொல்லப்பட்டனரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டிருந்தது.
பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன, இதன் போது புலம்பெயர் தமிழர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
இதன் போது, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றி வரும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து சைகை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கழுத்தை அறுக்கப் போவதாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் போராட்டம் நடத்தியவர்களுக்கு காண்பித்திருந்தார், இது தொடர்பிலான காணொளி இணைய ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு கழுத்து அறுத்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலான ஆதாரங்கள் உண்டு என சில புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்து அறுக்கும் சைகையானது, தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்கனவே இவ்வாறு கொன்றமைக்கான சான்றாக அமைந்துள்ளது.
ஆயதம் எதுவும் இல்லா தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் பிடிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
போரின் போது பிடிக்கப்படும் கைதிகளை கொலை செய்வது போர்க் குற்றச் செயல்களாகவே கருதப்பட வேண்டும்.
மனித உரிமை சட்டங்களுக்கு அமைய போர்க் கைதிகளை கொலை செய்வது போர்க் குற்றச் செயலாகும்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் விசாரணைகளின் பின்னர் இவ்வாறு கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளதனையே இந்த புகைப்பட ஆதாரங்கள் பறைசாற்றி நிற்கின்றன.
இறுதிக் கட்ட போரின் போது இவ்வாறு சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் இடம்பெற்றிருந்மை குறப்பிடத்தக்கது.
லண்டனில் கழுத்தை அறுத்து விடுவதாக சைகையால் காண்பித்த படையதிகாரியின் பணியை இடைநிறுத்துமாறு முன்னதாக வெளிவிவகார அமைச்சு, இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பணி இடைநிறுத்த உத்தரவினை ரத்து செய்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/community/01/173497
Geen opmerkingen:
Een reactie posten